20.01.20- சர்வதேச கராட்டி சாதனையாளர் பாலுராஜ் கௌரவிப்பு..

posted Jan 19, 2020, 5:23 PM by Habithas Nadaraja
தேசிய தெற்காசிய பொதுநலவாய மற்றும் ஆசிய பெருவிளையாட்டுப்போட்டிகளில் கராட்டிப்போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கங்களைப்பெற்று இலங்கைமண்ணிற்கு பெருமைசேர்த்த  கல்முனை சேனைக்குடியிருப்பைச்சேர்ந்த கராட்டி வீரர் சௌந்தரராஜன் பாலுராஜ் காரைதீவு பிரதேசசபையின் பொங்கல்விழாவின்போது(18.01.2020) பொன்னாடைபோர்த்தப்பட்டு
பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற பொங்கல்விழாவில் அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் வே.ஜெகதீசன் உதவிஉள்ளுராட்சிஆணையர் எ.ரி.எம்.றாபி உள்ளிட்டோர் அவருக்குப்பொன்னாடை
போர்த்திக்கௌரவித்தனர்.

காரைதீவு  நிருபர்


Comments