22.03.20- காரைதீவு பிரதேசத்தில் கடைப்பிடடிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம்.

posted Mar 22, 2020, 2:29 AM by Habithas Nadaraja   [ updated Mar 22, 2020, 2:56 AM ]
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டமானது அம்பாரை மாவட்டம் காரைதீவு பிரதேசத்திலும் கடைப்பிடடிக்கப்பட்டமை இன்றைய தினம்(21.03.2020) அதானிக்க முடிந்தது. இரானுவத்தினரும் பொலிஸ் பிரிவினரும் தங்கள் கடமையில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

காரைதீவு பிரதேசத்திலுள்ள வீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன்.இராணுவம் பொலிஸாரின் நடமாட்டங்களும் மற்றும் அவசர தேவைக்களுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்களை அவதானிக்க முடிந்தது.சுகாதார துறையினரும் மற்றும் அத்தியாவசிய சேவைக்கு பணிக்கப்பட்ட அதிகரிகளும் மற்றும் ஊடகத்துறையினரும் உண்மையான தவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதாரஸ்தாபனம் இந்த வைரசானது தொற்றக்கூடியது எனவும் பொது இடங்களை தவிர்த்து கொண்டு சுய தனிமையுடனும் தங்களுடைய  வீடுகளில் மக்கள் இருப்பதுடன் புகை பிடிப்பவர்களை அப்பழக்கத்திலிருந்து தவிர்த்து இருக்கும் படியும் வயதானர்கள் சிறுவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகளை உண்ணும் படியும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மக்கள் முழு அவதானத்துடன் அரசாங்கத்தினால் விடுக்கப்படுகின்ற அறிவுறுத்தல்களையும் சுகாதார திணைக்களத்தினரின் அறிவுறுத்தல்களையும் வைத்தியர்களின் அறிவுறுத்தல்களையும் கண்டிப்பாக கடைப்பிடிக்கும் சந்தர்ப்பங்களில் கொரோனாவை முற்றாக இல்லாது தடுக்கலாம்.Comments