21.03.21-கிழக்கு மாகாண ஹொக்கி போட்டியில் காரைதீவு ஹொக்கிலயன்ஸ் சாம்பியன்..

posted Mar 20, 2021, 6:45 PM by Habithas Nadaraja
கிழக்கு மாகாண ஹொக்கி போட்டியில்   காரைதீவு ஹொக்கிலயன்ஸ் சாம்பியன்
3வது தடவையாகவும் கிழக்கு மாகாண சாம்பியனாகி சாதனை..

கிழக்கு மாகாண விளையாடடுத்திணைக்களம் நடாத்திய மாகாணமட்ட ஹொக்கி போட்டியில்  அம்பாறை மாவட்டம் சார்பாக கலந்துகொண்ட  காரைதீவு ஹொக்கி அணியினர் வெற்றிபெற்று  மாகாணசாம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டனர். இது மாகாண சாம்பியனாகத் தெரிவாகும் 3வது தடவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இம்மாகாணமட்டப்போட்டி  கந்தளாயில் (17.03.2021)இடம்பெற்றது. இப்போட்டியில் கிழக்கு மாகாண ஹொக்கி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் காரைதீவு ஹொக்கி  லயன்ஸ் அணி திருக்கோணமலை மாவட்ட  ஹொக்கி அணியினரை 1:0 கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று அம்பாரை மாவட்டத்திற்கு  பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்தவருடம் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற பிரதேச செயலகங்களுக்கிடையிலான அம்பாறை மாவட்டமட்ட ஹொக்கி விளையாட்டுப்போட்டியில் நான்காவது தடவையாகவும் காரைதீவு ஹொக்கிலயன்ஸ் அணியினர் வெற்றிவாகை சூடி கிழக்கு மாகாணத்திற்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக மாகாணமட்டப்போட்டி தாமதமாகி இவ்வருடம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருந்தது.

காரைதீவு பிரதேசசெயலக அணிசார்பில் விளையாடிய ஹொக்கிலயன்ஸ் அணித்தலைவர் எஸ்.கேதீஸ்வரன்தேசியமட்டத்தில் போட்டியிடுவதற்கான பயிற்சிகளை விரைவில் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்.இதுவரை காரைதீவு ஹொக்கி லயன்ஸ்அணி மாகாணமட்டத்திற்கு 4தடவையும் தேசியமட்டத்திற்கு 3தடவையும் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

( வி.ரி.சகாதேவராஜா)


Comments