21.03.21- ஒஸ்கார் இணையவழி திறந்த கவிதை போட்டி 2021..

posted Mar 20, 2021, 6:49 PM by Habithas Nadaraja
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் ஜனைதினத்தை  கொண்டாடுமுகமாக  அவுஸதிரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம் (ஒஸ்கார்) உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் காரைதீவு மக்களிடையே நடாத்தும் மாபெரும் கவிதைப்போட்டி.

இப்போட்டியில் கலந்து பெறுமதிமிக்க பரிசில்களை சுவீகரிக்குமாறு அனைத்து காரைதீவு கவிஞர்களையும் ஒஸ்கார் கனிவோடு அழைக்கிறது.
இப்போட்டியில் இலங்கையிலிருந்து 10 போட்டியாளர்களும் ஏனைய நாடுகளிலிருந்து 10 போட்டியாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிப்போட்டியில் பங்கெடுப்பர். வெற்றியாளர்கள் இலத்திரனியல் பொது வாக்கெடுப்பின் மூலம் தேர்வுசெய்யப்படுவர். இப்போட்டி தொடர்பான மேலதிக  விபரங்களும் விதிமுறைகளும் கீழ் குறிப்பிடப்பட்டவாறு அமையும் .

ஆர்வமுள்ள கவிஞர்கள் கீழ்வரும் உறுப்பினர்களை தொடர்புகொண்டு போட்டி சம்பந்தமான மேலதிக விபரங்களை பெற்று கொள்ள முடியும் .

Lavanyan Thiruchelvam

Sanjeev Mylvakanam  -Australia/Overseas

 

Sathiyajith Nadesalingam

Sulaxan Logaraju

Sathiyamaran Vyramuttu -Srilanka

 

மேலும் பல தமிழ்மொழி விற்பன்னர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும் கவிதை போட்டியின் உயர் தரநிலையை உறுதிசெய்யவும் மேலும் சில புதிய கவிதை தலைப்புகளை வழங்குவதில் ஒஸ்கார்  மகிழ்ச்சியடைகின்றது .

அந்தவகையில் கீழ் உள்ள 4 கவிதை தலைப்புகளின் எந்த ஒரு தலைப்பையும் உங்கள் கவிதைக்கு நீங்கள் தெரிவு செய்ய முடியும் .

கவிதை தலைப்புகள் :

1. காரைதீவு சுவாமி விபுலாநந்தர் புகழ் கரையில்லா விண்ணை எட்டட்டும்

2. காரேறு மூதூர் முத்தமிழ் முனி புகழ் காலமெல்லாம் பரவட்டும்.

3. காரைதீவு பெற்றிட்ட கடாட்ச முனி விபுலாநந்த அடிகள் புகழ் வீசட்டும் பாரினிலே.

4.காரைதீவு தந்த தமிழ் பேராசான் சுவாமி விபுலானந்த அடிகள்

போட்டி விதிமுறைகள் :

வயதெல்லை கிடையாது ஃ உலகெங்கும் பரந்து வாழும் எமது உறவுகள் யாரும் பங்குபெறலாம்.

கவிதை ஆக குறைந்தது 4-6 செய்யுள் ஃகவிதை பத்திகளை கொண்டமைந்திருத்தல் வேண்டும்

உங்கள் மென்பிரதி ஒரு A4 Size உள் பொருந்துதல் வேண்டும்.

நடுவர்கள் 10/10 போட்டியாளர்களை தரநிலை படுத்தலுக்கு கீழுள்ள அட்டவணையை பயன்படுத்துவர்

எவ்வாறாயினும் இறுதி வெற்றியாளர் இணையவழி திறந்த வாக்கெடுப்பின் மூலமே தெரிவுசெய்யப்படுவர் .

போட்டிகளின் நம்பக தன்மையை ஒஸ்கார்  நிர்வாக குழு உறுதி செய்யும் .

உங்கள் ஆக்கங்களை auskar2011@yahoo.com.au என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் (20.03.2021)அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கின்றோம்.

எனவே எங்கள் மண் தந்த தமிழ் ஆளுமை சுவாமி விபுலாந்தருடைய புகழ் உலகெங்கும் பரந்து வாழும் எங்கள் உறவுகளின் இதயங்களில் என்றும் நிறைந்திருக்க ஒஸ்கார் எடுக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்து பரிசில்களை பெறுமாறு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம் .

தோண்டுகின்ற போதெல்லாம் சுரக்கின்ற செந்தமிழே!
வேண்டுகின்ற போதெல்லாம் விளைகின்ற நித்திலமே !
முத்தமிழின் வித்தகனின் புகழ் அதனை
வண்ணத்தமிழ் கொண்டு வாயார வாழ்த்தி பாடி இசை தமிழன் எம் புதல்வன் புகழ் பரவ வழி சமைப்பீர்!

 வி.ரி.சகாதேவராஜாComments