22.06.22- காரைதீவில் சர்வதேச யோகா தினம்..

posted Jun 21, 2022, 5:42 PM by Habithas Nadaraja
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு , இந்து ஸ்வயம் சேவக சங்கம் காரைதீவில் சர்வதேசயோகா தினத்தை கொண்டாடியது காரைதீவு  லட்சுமி அம்பாள் மண்டபத்தில் இந்து ஸ்வயம் சேவக சங்க மாவட்ட பொறுப்பாளர் இரா. குணசிங்கம் தலைமையில் இந்நிகழ்வு நேற்று காலை  இடம்பெற்றது .

நிகழ்வில், யோகாசனப் பயிற்சி அதன் முக்கியத்துவம் பற்றிய சொற்பொழிவு ,அமுத கானம் போன்றன இடம்பெற்றன.நிகழ்வில் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ,காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன்,  உதவி கல்வி பணிப்பாளர் விரி.சகாதேவராஜா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

அக்கரைப்பற்று ,பாண்டிருப்பு, கல்முனை போன்ற பகுதிகளிலிருந்து இந்த நிகழ்விற்கு மாணவர்களும், பெரியோர்களும் வருகை தந்திருந்தார்கள்.

( காரைதீவு  சகா)

Comments