23.10.19- கே.எஸ்.ஸி கிரிக்கட்அணிக்கு புதிய ஜேர்சி அறிமுகம்..

posted Oct 22, 2019, 6:33 PM by Habithas Nadaraja
காரைதீவு விளையாட்டுக்கிழகத்தின்  கிரிகட் அணிக்கான புதிய ஜேர்சி அறிமுக நிகழ்வு நேற்று கழகத்தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

காரைதீவு விளையாட்டுக்கழக தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற  இந்  நிகழ்வில் அதிதிகளாக கழக போசகர்களான வி.ராஜேந்திரன் மற்றும் வி.ரி. சகாதேவராஜா கழக சிரேஷ்ட உறுப்பினர் கனிஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கிரிகட் அணிக்காக புதிய ஜேர்சியை அன்பளிப்பு செய்த கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் தில்லையம்பலம் தயாகரன்(கட்டார்) அங்கு நன்றிகூறி பாராட்டப்பட்டார்;.

புதிய சீருடைகளை  பெற்றகிரிக்கட் அணியினர் புதிய உத்வேகத்துடன் உற்சாகத்துடன் விளையாடி கடந்தகாலங்களைவிட மேலும் சாதனைகளை கழகத்திற்கு பெருமைகளைச்சேர்க்கவேண்டுமென அதிதிகளால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

(காரைதீவு  நிருபர்)Comments