23.11.18- காரைதீவில் கார்த்திகை ஒளி வெள்ளத்தில் மிதந்த இல்லங்கள்..

posted Nov 22, 2018, 5:35 PM by Habithas Nadaraja
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

இந்த தீப தீருநாளை முன்னிட்டு காரைதீவு கிராமத்தில் உள்ள வீடுகளில் மாலை வேளையில் இறைவனை வேண்டி பூசை வழிபாடுகளும் மற்றும் வீடுகளிலும் போது இடங்களின் முற்றங்களிலும் கார்த்திகை தீபங்களும் ஏற்றிவைக்கப்பட்டன.

Comments