24.10.18- காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற 90வது ஆண்டுநிறைவு பண்பாட்டுப் பேரணி!

posted Oct 23, 2018, 7:34 PM by Habithas Nadaraja

காரைதீவு இ.கி.சங்க பெண்கள் பாடசாலையின் 90வது ஆண்டு நிறைவையொட்டிய மீண்டுமோர் பள்ளிக்கூடம் பண்பாட்டுப் பேரணியொன்று நேற்று 23.10.2018ம் திகதி  காலையில்  காரைதீவில் அதிபர் செ.மணிமாறன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்ரீ இராமகிருஸ்மிசன் மட்டு.மாநில முதல்வர் ஸ்ரீமத்சுவாமி அக்ஷயானந்த மஹராஜ் மற்றும் மிசன் பிரமுகர்கள் முன்னேவர ஏனைய பண்பாட்டு கலைஅமிசங்கள் பின்னே பவனிவந்தன 

முன்னதாக பாடசாலையிலுள்ள சாரதா ஆலயத்தில் சுவாமி மங்களாராத்தி காட்டி விசேடபூஜையை நிகழ்த்தினார். பின்னர் பண்பாட்டுப்பேரணியின் ஞாபகார்த்தமாக சுவாமிகளால் மரமொன்று பாடசாலை வளாகத்தில் நடப்பட்டது.

இப் பண்பாட்டுப்பேரணியானது  சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஊர்திகள் சகிதம் காரைதீவில் வரையறுக்கப்பட்ட வீதிகளினூடாக பவனிவந்தது. இதில் பாரம்பரிய காவடி கரகாட்டம் கும்மி உள்ளிட்ட கீழைத்தேய மேலைத்தேய நிகழ்ச்சிகள் பங்கேற்றன.


இப்பேரணியில் உள்ளுர்  வெளியூரிலுள்ள பழைய மாணவிகள் பெற்றோர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர் சங்கம் அழைப்புவிடுத்ததற்கமைய பலரும் கலந்துசிறப்பித்தனர்.

இதேவேளை 90வது ஆண்டு நிறைவுவிழா பெருநிகழ்வு நொவம்பர் 2இல் நடாத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.அதனையொட்டியசஞ்சிகையொன்றும் வெளியிடப்படவுள்ளது.

அதன் முன்னோடி நிகழ்ச்சிகளாக விளையாட்டுப்போட்டி கவிதை கட்டுரை போட்டிகள் கல்விக்கண்காட்சி 90வது ஆண்டுநிறைவுநினைவுதின ரீசேர்ட் வெளியிட்டமை போன்ற பல நிகழ்ச்சிகள் ஏலவே நடந்தேறியுள்ளன.


Comments