25.01.20- காரைதீவு HDO பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு..

posted Jan 24, 2020, 5:06 PM by Habithas Nadaraja
காரைதீவு மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலையில்  புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது 2020.01.20ம் திகதி  காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ.கி.ஜெயசிறில் அவர்கள், கௌரவ அதிதியாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எம்.சிதம்பரநாதன் அவர்கள் சிறப்பதிதிகளாக காரைதீவு பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.வி.விஜயதாஸ் காரைதீவு – 06ம் பிரிவு குடும்ப நல உத்தியோகத்தர் திருமதி.ஏ.பரம்சோதி காரைதீவு – 06ம் பிரிவு கிராம சேவகர் திருமதி.ஆர்.எஸ்தராணி காரைதீவு – 06ம் பிரிவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.சிவேஸ்வரி மனித அபிவிருத்தி தாபனம் சார்பாக ஈ.தர்சிகர் கலந்து கொண்டதுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.

இதன் போது இரண்டாம் வருட மாணவர்கள் புதிதாக வருகைதந்த 16 மாணவர்களை  மாலையணிவித்து வரவேற்றனர்.

காரைதீவு நிருபர்
Comments