25.03.20- கொரோனா அற்ற காரைதீவு' விசேட வேலைத்திட்டம் அமுல்..

posted Mar 24, 2020, 7:27 PM by Habithas Nadaraja
கொரோனா அற்ற காரைதீவு  விசேட வேலைத்திட்டம் அமுல்
விசேடசெயலணிக்குழு நியமனம் கொரோனா தகவல்தளம் திறப்பு..

காரைதீவு பிரதேசசபை ஏற்பாட்டில் 'கொரோனா அற்ற காரைதீவு' CORONA FREE KARATHIVU ' எனும் விசேட  கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் அவசரஅவசரமாக முன்னெடுத்துள்ளது.

இதற்கென  கொரோனா அற்ற காரைதீவு விசேட செயலணிக்குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதற்காக காரைதீவு பிரதான நூலகத்தை கொரோனா தகவல் மையம் என்றபெயரில் காரியாலயம் ஓன்றும்  திறந்துவைக்கப்பட்டுள்ளது. காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் திங்களன்று இதனைத்திறந்துவைத்தார்.

காரியாலயத்துடன் தொடர்புகொள்ள விசேட தொலைபேசி 067 4929 104 எனும் இலக்க தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

24மணிநேரமும் இக்காரியாலயம் இயங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டரடிப்படையில் காரியாலய பொறுப்பாளர்கள் ஒருவாகனத்துடன் செயற்பட்டுவருகிறார்கள். முதலில் உறுப்பினர் ஆ.புபாலரெத்தினம் சேவையை தாமாகமுன்வந்து பொறுப்பேற்றார்.

ஊரடங்கு வேளைகளில் மக்களுக்கு அத்தியாவசியதேவைகள் ஏற்பட்டால்  இத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு சேவைகளைப்பெறலாம் என்று தவிசாளர் ஜெயசிறில் அறிவித்துள்ளார்.

அதேவேளை ஊரடங்குவேளைகளில் மக்களின் அத்தியாவசிய மருத்துவஇ விசேட தேவைகளை கருத்தில் கொண்டு அந்தந்த வட்டாரமக்களுக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஊடாக போக்குவரத்து வசதிகளையும் சில பொருட்களையும் முக்கிய தேவைகளை நிறைவேற்றும் முகமாக ஒரு குழு ஒன்றை நியமித்து அனைத்து வசதிகளையும் மக்களுக்கு செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைதீவு-ஜெயசிறில் 0773100852

மாளிகைக்காடு-யாகீர்-0776180066,பஸ்மீர்-0772355774இ,ஸ்மாயில்-0776636269

காரைதீவு(1,2,5)-நேசராஜா-0776047440

காரைதீவு(6,7,10)-வு.மோகனதாஸ்0776282305,நு.மோகன்-0779911710

காரைதீவு(11,12)-ஜெயராணி-0758701727காண்டீபன்-0779346074

காரைதீவு(3,4,8,9)-பூபாலரெட்ணம்-0755702081

மாவடிப்பள்ளி-ஜலீல்-077996 7955ரணிஸ்-0772030409

இந்த இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு  நிருபர்சகாComments