26.06.22- சம்மாந்துறை கோரக்கோயில் அகோரமாரியம்மன் ஆலய தீமிதிப்பு சடங்கு..

posted Jun 26, 2022, 2:26 AM by Habithas Nadaraja   [ updated Jun 26, 2022, 2:37 AM ]
சம்மாந்துறை கோரக்கோயில் அகோரமாரியம்மனின் தீமிதிப்புசடங்கு ஆரம்பம்..
 பாற்குடபவனி  04ஆம் திகதி தீமிதிப்பு சடங்கு  9நாள் சடங்கு...

கிழக்கிலங்கை சம்மாந்துறை கோரக்கோயில் தழிழ்ப்பிரிவு-02  அருள்மிகு ஸ்ரீ அகோரமாரியம்மன் ஆலய சுபகிருது வருட வருடாந்த சடங்கும் தீமிதிப்பு வைபவமும் எதிர்வரும் 03.07.2022ஆம் திகதி  கதவுதிறத்தலுடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து 09 தினங்கள் ஆலய பிரதம பூசகர் மு.ஜெகநாதன் ஜயா தலைமையில் திருச்சடங்குகள் நடைபெறும். 04ஆம் திகதி  சம்மாந்துறை பத்ரகாளியம்பாள் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி இடம்பெறும். 11ஆம் திகதி இரவு வெளி ஊர்வலம் நடைபெறும். இறுதிநாள் யூலை மாதம் 13ஆம் திகதி  காலை தீமிதித்தல் வைபவம் இடம்பெறும். தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறும்.. 






Comments