25.06.22- காரைதீவு காளியம்பாள் தீமிதிப்பு வைபவம் ஆரம்பம்..

posted Jun 24, 2022, 9:01 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தீ மிதிப்பு வைபவம் கடல்நீர் எடுத்தலுடன் ஆரம்பமாகியது.

 நேற்று முன்தினம் காலை ஆலய பூசகர் கு. லோகேஷ் தலைமையில் ஆலய தலைவர் மற்றும் நிருவாகிகள் சமுத்திரத்திற்கு சென்று கடல் நீரை எடுத்து வந்து ஆலய திருக்கதவு திறந்தனர்.

 அன்றிலிருந்து அங்கு காளி அம்பாள் சடங்கு நடைபெற்று வருகிறது.எதிர்வரும் முதலாம் திகதி அங்கு தீ மிதிப்பு வைபவம் நடைபெற இருக்கிறது என்று ஆலய தலைவர் கலாபூஷணம் எஸ். இராமநாதன் தெரிவித்தார்.

(வி.ரி. சகா தேவராஜா)
Comments