24.10.18- காரைதீவு சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு..

posted Oct 23, 2018, 8:32 PM by Habithas Nadaraja   [ updated Oct 23, 2018, 9:07 PM ]
சத்ய சாயி பாபாவின் 93வது ஜனன தினத்தை முன்னிட்டு காரைதீவு சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில் கிழக்குப்பிராந்திய சத்ய சாயி சர்வதேச நிலையங்களின் இணைப்புக்குழுவின் அனுசரணையுடன் எதிர்வரும் 2018.10.27ம் திகதி காலை8.30 மணிமுதல் காரைதீவு சத்திய சாயி நிலையத்தில் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்தம் பற்றாக்குறையாகஉள்ளதாலும் இரத்தம் உடனடியாக தேவைப்படுவதன் காரணமாகவும் வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் வேண்டு கோளுக்கிணங்கவும் அவசரமாகவும் இவ் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ் இரத்ததான நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு உங்களால் இயன்ற பங்களிப்பைத் தந்துவுமாறு காரைதீவு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments