26.01.19- போதைப்பொருள் தடுப்புவாரத்தில் ஊடகவியலாளர் தினம்..

posted Jan 26, 2019, 1:27 AM by Habithas Nadaraja
ஜனாதிபதியின் ஏற்பாட்டில் நாடளாவியரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் கடந்த ஒருவாரகாலமாக அனுஸ்ட்டிக்கப்பட்டுவரும் போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் இறுதிநாளாகிய நேற்று(25.01.2019)  ஊடகவியலாளருடனான சந்திப்புஇடம்பெற்றது. காரைதீவு இ.கி.சங்க பெண்கள் பாடசாலையில் அதிபர் எஸ்.மணிமாறன் தலைமையில்இடம்பெற்ற நிகழ்வில் காரைதீவின் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா விசேடமாக கலந்துசிறப்பித்தார். அங்கு மாணவர்களின் பதாதைகளை அவர் பார்வையிடுவதையும் பின்னர் மாணவர் மத்தியில் போதைப்பொருள் தடுப்பின் முக்கியத்துவம் தொடர்பில் உரையாற்றுவதையும் ஊடகவியலாளர் இ.ராஜகுமாரும் உடனிருப்பதைக்காணலாம்.

(காரைதீவு  நிருபர் )

Comments