27.10.18- காரைதீவுவிபுலாநந்தா மாணவி முகுர்த்தனாவிற்கு தங்கப்பதக்கம்..

posted Oct 26, 2018, 8:57 PM by Habithas Nadaraja   [ updated Oct 26, 2018, 8:58 PM ]

நாளைஅகில இலங்கை தமிழ்மொழித்தின விருதுவழங்கல் விழாவில் 
காரைதீவுவிபுலாநந்தா மாணவி முகுர்த்தனாவிற்கு தங்கப்பதக்கம்..

அகில இலங்கை தமிழ்மொழித்தினப்போட்டி வெற்றியாளர்களுக்கான  விருதுவழங்கல் விழாவில் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி மாணவி செல்வி ரவீந்திரன் முகுர்த்தனா தங்கப்பதக்கம் பெறவிருக்கிறார். 

இவர் தமிழியல்கட்டுரைவரைதலும் இலக்கியநயமும் என்றபிரிவில் எழுதிய கட்டுரை தேசியமட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தது.

இப்பெருவிழா நாளை 27ஆம் திகதி மாத்தளை இந்து தேசியக்கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலை 10மணிக்கு நடைபெறும்.

தேசியமட்டப்போட்டியில் 1ஆம் 2ஆம் 3ஆம் இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்மொழிப்பிரிவின் உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி ஜி.சடகோபன் தெரிவித்தார்.

(காரைதீவு நிருபர் சகா)Comments