27.11.19- மழையினால் காரைதீவில் வெள்ளம் பாய்கிறது வயல் வெள்ளக்காடாக காட்சி..

posted Nov 26, 2019, 5:41 PM by Habithas Nadaraja
மழையினால் காரைதீவில் வெள்ளம் பாய்கிறது வயல் வெள்ளக்காடாக காட்சி
ஆற்றுவாழையால் நீரேரி தாண்டு அருகிலுள்ள குடிமனைகளுக்கு பாதிப்பு..


அம்பாறை மாவட்டத்தில் தொடரும் அடைமழை காரணமாக மாவட்டம் பூராக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் தேங்கிநிற்கிறது. வயல்நிலங்கள் வெள்ளக்காடாகக்காட்சி
 
இதனால் அன்றாட இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கடல்மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மரக்கறியின் விலைகள்எகிறிக்காணப்படுகின்றது. காரைதீவில் வீதி வாய்க்கால்களில் வெள்ளம் தேங்கிநிற்கிறது. குளவெளிப்பகுதி வெள்ளத்தில் தாழ்ந்துள்ளது.

காரைதீவை மத்தியில் ஊடறுக்கும் கரைச்சை எனும் நீரேந்து பகுதிகளில் ஆற்றுவாழை எனும் நீர்த்தாவரம் அடைத்துப்பெருகிக்காணப்படுவதால் நீரோட்டத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருமருங்கிலுமுள்ள குடிமனைகளுள் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதேவேளை வடக்குகிழக்கில் தொடர்ச்சியாக அடைமழை பொழியுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு  நிருபர்)

Comments