28.10.19- தீபஒளித்திருநாளை முன்னிட்டு நடாத்திய கிரிக்கட் மற்றும் உதைபந்தாட்டப்போட்டிகள்..

posted Oct 27, 2019, 6:55 PM by Habithas Nadaraja
தீபஒளித்திருநாளை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் திரு.திருமதி சபாபதி சோதிஅம்மா தம்பதினரின் ஞாபகார்த்த நினைவுக் கிண்ண கிரிக்கட் மற்றும் உதைபந்தாட்டப்போட்டிகள் 26.10.2019ம் திகதி காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

தெ.வினோதராஜ்(பிரதிப்பணிப்பாளர் இலங்கை.தொ.ப.அதிகார சபை மட்டக்களப்பு மாவட்டம்)தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினரும் உத்தரவுபெற்ற நிலஅளவையாளர் கௌரவ திரு.எஸ்.நேசராஜா அர்களும் ஓய்வுபெற்ற பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.விவேகானந்தராஜா மற்றும் சிறப்பு அதிதிகளாக விவேகானந்தா விளையாட்டுக்கழக போசகர்கள் ஆலோசகர்கள், முன்னைநாள், தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் சிரேஸ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். Comments