28.12.18- 14வது வருட சுனாமி ஆத்மா சாந்திப் பிரார்த்தனை..

posted Dec 27, 2018, 4:35 PM by Habithas Nadaraja

2004ம் ஆண்டு ஆழிப்பேரலையின் சீற்றத்தால் காவுகொள்ளப்பட்ட எமது உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களுடைய ஆத்மா சாந்தி வேண்டிய ஆத்மா சாந்திப் பிரார்த்தனையானது  26.12.2018ம் திகதி காரைதீவு கடற்கரையில் சுனாமி  நினைவுத்தூபி முன்னிலையில் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.

காரைதீவு மீனவ சமூகத்தினரின் ஒத்துழைப்போடும், இளைஞர்களது பூரண ஒத்துழைப்போடும், காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பல நூற்றுக்கணக்காக பொது மக்கள் கலந்து கொண்டு உயிர் நீர்த்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி தீபங்களும் ஏற்றினர்.

மீனவ சமூகம் சார்பாக நந்தி கொடி ஏற்றி வைக்கப்பட்டது அதனை தொடர்ந்து இந்துமதகீதம் இசைக்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல், இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக  தீச்சுடர்ஏற்றிவைக்கும் நிகழ்வுகளும் , சுனாமி  நினைவுத்தூபிக்கும் 2000ம் ஆண்டு திருவாதிரை தீர்த்தோற்சவத்தில் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகாத்தமாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் புஸ்பாஞ்சலி ,  ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்றம் பெற்றது.

இன் நிகழ்வில் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.Comments