29.04.20- வெளிமாவட்ட மீன்கள் கொண்டு வருவதற்குத் தடை காரைதீவு கொரோனா வழிநடாத்தல்கூட்டத்தில் தீர்மானம்..

posted Apr 28, 2020, 6:13 PM by Habithas Nadaraja
எந்தக்காரணம்கொண்டும் மன்னார் திருமலை ஹம்பாந்தோட்டை புத்தளம் போன்ற வெளிமாவட்ட மீன்களை மாளிகைக்காட்டு காலைமீன்சந்தைக்கு கொண்டுவரக்கூடாது.கொரோனா நெருக்கடி முடியும் வரை அது  தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான தீர்மானம் காரைதீவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காரைதீவு பிரதேச கொவிட் 19 கட்டுப்படுத்தல் வழிகாட்டல் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக காரைதீவு பிரதேசசெயலகத்துக்குட்பட்ட மாளிகைக்காடு மீன்வாடி உரிமையாளர் களுக்கிடையிலான கலந்துரையாடல் பிரதேச செயலாளர்  சிவ. ஜெகராஜன்  தலைமையில்   நடைபெற்றது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர்  கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  கே.டி.எஸ்.ஜெயலத் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஐ. றிஸ்னி  உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன்  காரைதீவு இராணுவ பொறுப்பதிகாரி பிரதேச சபை செயலாளர் மற்றும் ஏனைய கொரோனா கட்டுபடுதல் வழிகாட்டு குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இதன்போது ஊழஎனை19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாளிகைக்காடு கடற்கரை வீதியில் அமைந்துள்ள பதிவுசெய்யப்பட்ட வாடிகளுக்கு அங்காடி வியாபாரிகளுக்கு மாத்திரம் மொத்த வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்குதல் மீன் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அனைவரும் முகக்கவசம் கையுறை போன்றவைகள் அணிந்திருந்து சமூக இடைவெளியை எல்லா நேரங்களிலும் ஒரு மீற்றருக்கு அதிகமாகப் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்தல் அவர்களுக்கு தேவையான மீன்களை பதனிடும் ஐஸ் மற்றும் உப்பு போன்றவைகளை மாவட்டத்தினுள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குதல் வெளி மாவட்டத்திற்கு மீன்களை ஏற்றுமதி செய்தல் மட்டுப்படுத்தப்படுதல் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்கின்ற வாடி உரிமையாளர்களின் உரிமம் இரத்து செய்தல் போன்ற தீர்மானங்கள் இதன் போது நிறைவேற்றப்பட்டது.

காரைதீவு  நிருபர்
Comments