29.09.18- இன்று திருக்கோவில் பிரதேசசெயலாளர் ஜெகராஜன் சீனா பயணம்..

posted Sep 28, 2018, 7:34 PM by Habithas Nadaraja
காரைதீவைச் சேர்ந்த திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் இன்று(29.09.2018) சீனா பயணமாகிறார்.

இலங்கையிலிருந்து உள்நாட்டலுவல்கள் அமைச்சைச் சேர்ந்த நால்வர் புலமைப்பரிசில் பெற்று இன்று சீனா பயணமாகின்றனர். 

அவர்களுள் ஒரேயொரு தமிழ்மொழிமூல நிருவாகசேவை அதிகாரி ஜெகராஜன் ஆவார். ஏனைய மூவரும் பெரும்பான்மையின அதிகாரிகளாவர்.

இவர்கள் சீனா பீஜிங்கில் நாளை 30ஆம் திகதி முதல் எதிர்வரும் அக்டோபர் 20ஆம் திகதி வரை 3வாரங்கள் தங்கியிருப்பார்கள். 

அங்கு  “Logistic management and development” என்ற பயிற்சிநெறியில் கலந்துகொள்வார்கள்.


Comments