30.09.18- சம்மாந்துறை தழிழ் குறிச்சி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்..

posted Sep 29, 2018, 6:40 PM by Habithas Nadaraja
சம்மாந்துறை தழிழ் குறிச்சியில் பன்னெடுங்காலமாக பக்தர்களுக்கு அருள்பாலித்திலங்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்மாள் தேவஸ்தான  திருக்கதவு திறத்தலை முன்னிட்டு எதிர்வரும் 01.10.2018 அன்று விளம்பி வருஷம் புரட்டாதித் திங்கள் 15ம் நாள் திங்கட்கிழமை மிருக சீருட நட்சத்திரமும் சப்தமி திதியும் கூடிய உதயம் 06மணி முதல் 07.32 வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் திருக்கதவு திறக்கப்பட்டு தொடந்து 10.10.2018 அன்று காலை 7.30 மணிக்கு தீ மிதித்தல் வைபவத்துடன் இனிதே நிறைவு பெற அன்னை அகிலாண்டஸ்வரி திருவருள் பாலித்துள்ளதால் அடியார்கள் பக்த கோடிகள் அனைவரும் வருகை தந்து பாற்குட பவனி உற்சவகால கிரியைகளிலும் கலந்து கொண்டு அம்மனின் திருவட்கடாட்சம் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வீர்களாக.


Comments