30.10.17- கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போர்க்கொடி!

posted Oct 29, 2017, 6:36 PM by Habithas Nadaraja   [ updated Oct 29, 2017, 6:38 PM ]
 கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போர்க்கொடி! புதனன்று ஆளுநருடன் சந்திப்பு: தீர்வின்றேல் போராட்டம்!
அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தலைவர் யசீர் சூளுரை!

கிழக்கு பட்டதாரிகளை ஆசிரியர்சேவைக்குள் உள்ளீர்க்க அண்மையில் நடாத்தப்பட்ட  திறந்த போட்டி பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர் பிரயோகப்பரீட்சைக்காக வெளியிடப்பட்ட   முடிவுகளில் பல அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. எனவே தமக்கு நீதி வழங்கப்படவேண்டும் எனக்கூறி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் அவசர ஒன்றுகூடலொன்று இன்று  (29) ஞாயிற்றுக்கிழமை பகல் காரைதீவில் ஏலவே 156நாட்கள் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்ற அதே இடத்தில் இடம்பெற்றது.

அங்கு அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தலைவர் யசீர்மொகமட் அங்கு குழுமியிருந்த பட்டதாரிகளின் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டவராக ஆக்ரோசமாக உரையாற்றினார்.

அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி (30) திங்கட்கிழமை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைக்காரியாலயத்தில் தமக்கேற்பட்ட அநீதிகளை விளக்கி முறைப்பாடொன்றை சமர்ப்பிப்பது என்றும் புதன்கிழமை(1) திருகோணமலை சென்று கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவைச் சந்திப்பதென்றும் முடிவானது.

அவர் அங்கு உரையாற்றுகையில்:

நாம் 156நாட்கள் தொடராக மழையிலும் வெயிலிலும் இருந்து போராடியதற்கு எந்தப்பலனுமில்லாதவகையில் கிழக்குமாகாணசபை வேண்டுமென்றே செயற்பட்டிருக்கிறது.

எமது அரசியல்வாதிகள் இதுவிடயம் தொடர்பில் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நேற்று ஒரு பாராளுமன்ற உறுப்பினரைச்சந்தித்து இந்த
அநீதியைச்சொல்லச்சென்றவேளை 3மணிநேரம் காத்திருக்கவேண்டியேற்பட்டது. ஈற்றில் தான் மட்டக்களப்பிற்குச்செல்லவேண்டும் பிறகு வாருங்கள் என்று அலட்சியமாகக்கூறி சென்றுவிட்டார்.

தேர்தல் நெருங்கிவிட்டது என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள். வெட்கம் ரோசம் மானம் இருந்தால் இம்முறை தேர்தலில் நின்று பார்க்கட்டும்.பின்பு தெரியும் இப்பட்டதாரிகள் யாரென்று?

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட பெயர்விபரங்களைப்பார்க்கின்றபோது இது மிகவும் மன வேதனையை அளிக்கின்றது. அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது.அது தொடர்பாக எமது பட்டதாரிகள் பலரின் ஆதங்கங்களையும் ஏமாற்றத்தையும் கருத்தில் கொண்டு பலரின் வேண்டுகளுக்கிணங்க நாங்கள் மீண்டும் பாரிய ஒன்று கூடலை  ஏற்பாடு செய்திருந்தோம்.

அநீதிகள்!

கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டி பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் நேர்முக தேர்விற்கான மாவட்ட முதல் நிலைப் புள்ளிகள் அடிப்படையில் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான அநீதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண வர்த்தமானி அறிவித்தலின்படி போட்டிப்பரீட்சையில் சராசரியாக இரு பாடங்களிலும் 40 புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்தப் பட்டு அதில் கிடைக்கப் பெறும் மொத்த புள்ளிகளின் மாவட்ட முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் நேர்முகத்திற்கு அழைக்கப்படாமல் வெற்றிடத்தின் அளவிற்கான சித்தியடைந்த பட்டதாரிகளை மாத்திரம் பெயர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளமையானது கேலிக்கூத்தான விடயமாகும். இவ்வாறு பெயர் பட்டியல் வெளியிடப்படும் எனில் ஏன் நேர்முகப் பரீட்சையில் 25 புள்ளிகள் வழங்கப்பட வேண்டும். நேர்முகப் பரீட்சை புள்ளியின் பின்னரே வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப் பட வேண்டும். இதுவே தொழில் உள்ளீர்ப்புக்கான பொறிமுறையாகும்.

மேலும் மாவட்ட அடிப்படையில் வெட்டிப் புள்ளி வழங்கப் படுவதால் குறைந்தபுள்ளிகளைப் பெற்ற பட்டதாரிகள் உள்வாங்கப் படும் அதேவேளை அம்பாரைமட்டக்களப்பு பட்டதாரிகள் புறக்கணிக்கப் படிக்கின்றனர். மேலும் ஒன்றிக்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளின் பெயர் இரண்டு அல்லது மூன்று பட்டியல்களில் உள்வாங்கப் பட்டிருப்பது ஏனையபட்டதாரிகளின் வயிற்றில் அடிப்பதற்கு சமனாகும் .

மேலும் அரச திணைக்களத்தில் அரச நிறுவனங்களில் வேலை செய்யும் அரச ஊழியர்களின் பெயர் பட்டியலில் உள்வாங்கப் படிருப்பது அடிப்படை தகுதிக்குமுரணான ஒரு விடயமாகும்.கிழக்கு மாகாணத்தில் 4927 ஆசிரியர் வெற்றுடங்கள் காணப்படுகின்றது என
கல்விப் பணிப்பாளர் அறிக்கை விட்ட நிலையில் 1446 வெற்றிடங்களை நிரப்பமத்திய அரசின் அனுமதி கிடைத்தது. எனவே மீதமுள்ள 3481 வெற்றிடங்களுக்குள்சராசரியாக 40 புள்ளிகள் பெற்ற பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கானஅங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.

உதாரணமாக நாடகமும் அரங்கியலும் பாடத்துக்கு தெரிவானவர்களில் ஒருவரின்பெயர் இரண்டு தடவை குறிப்பிடப்பட்டிருக்கின்றது.இன்னும் ஒரு பெயர் மூன்றுபாடத்தில் இருக்ககிறது.  மட்டக்களப்பு 110அம்பாறை108திருகோணமலை 84  வெட்டுப்பள்ளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமா? என்றும் கேள்விஎழுப்பப்பட்டிருக்கிறது.

மாவட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்படுவது அம்பாறைமாவட்டத்திற்கு பாரிய ஆபத்தாக அமைகின்றது.
இங்கு 256 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட எவருக்குமே நேர்முகப்பரீட்சைக்கு அழைப்புவரவில்லை. இதற்குத்தானா நாம் போராடினோம்?

எனவே 40வயதுக்கு மேற்பட்டவர்களையும் 35புள்ளிக்கு  மேற்பட்டவர்கள்அனைவரையும் அழைக்கவேண்டும்.
கல்விப்பணிப்பாளர் கூறிய படி 4927 ஆசிரிய வெற்றிடங்களையும்நிரப்பவேண்டும். அப்படியெனின் சகலரும் உள்வாங்கப்படுவார்கள்.

அம்பாறை மாவட்டத்தில்...

அம்பாறை மாவட்டத்திலிருந்து 3009 பட்டதாரிகள் பரீட்சைக்குத்தோற்றியிருந்தனர். இவர்களில் 1296பேர் சித்தியடைந்துள்ளனர். ஆனால்
நேர்முகப்பரீட்சைக்காக 331பட்டதாரிகளை மாத்திரமே அழைத்துள்ளனர். அதாவது1744பேர் சித்தியடையாதோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுளனர்.

சித்தியடைந்த 1265 பேரை எடுத்துக்கொண்டால் 1990 க்கும் 1994க்கும்இடைப்பட்ட காலத்தில் பிறந்த 674பேர் சித்திபெற்றுள்ளனர்.இது 53.3வீதம்ஆகும். ஆனால் 1972முதல் 1989வரை பிறந்த  591பேர்சித்திபெற்றுள்ளனர்.ஆகும். இது 46.7வீதமாகும். அதாவது பழைய பட்டதாரிகள்குறைவாகவும் புதிய பட்டதாரிகள் கூடுதலாகவும் சித்திபெற்றுள்ளனர். அதுசகஜமே.

இதேபோல் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட  331 பேரை எடுத்துக்கொண்டால்1990 க்கும் 1994க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த 195பேர் .இது 49வீதம்ஆகும். ஆனால் 1972முதல் 1989வரை பிறந்த  136பேர்சித்திபெற்றுள்ளனர்.ஆகும். இது 41வீதமாகும்.அதாவது பழைய பட்டதாரிகள் குறைவாகவும் புதிய பட்டதாரிகள் கூடுதலாகவும்சித்திபெற்றுள்ளனர். அது சகஜமே.இதற்காகத்தான் வெட்டுப்புள்ளியை
35ஆகக்குறைக்கவேண்டுமெனக்கேட்டோம்.

எமது சந்திப்பு பலனளிக்காவிடில் நாம் மீண்டும்சத்தியாக்கிரகப்போராட்டத்திலீடுபடுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.என்றார்.

மற்றுமொரு பாதிக்கப்பட்ட பட்டதாரி கூறுகையில்:

கிழக்கு மாகாணசபையின் 62வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம்கொண்டுவந்த தனிநபர் பிரேரணையில் 35வயதுக்கு மேற்பட்டோருக்குபரீட்சையின்றி நேர்முகப்பரீட்சைமூலமே நியமனம் வழங்குவதெனவும் இரண்டுபள்ளிகளையும் கூட்டி இரண்டால் வகுக்கும்போது 40புள்ளிகள் இருந்தால்நியமனம் வழங்கலாம் என்பது சபையில் மூன்றில்இரண்டு பெரும்பான்மை வாக்ககளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இத்தீர்மானம் இன்னும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பப்படவில்லையென அறிகின்றோம். எனவே அத்தீர்மானத்தை கிழக்கு மாகாணசபை வழங்கவேண்டும்.புதனன்று முன்னாள் முதலமைச்சரைச்சந்தித்து இதனைப்பெறவுள்ளோம் என்றார்.
இறுதியில் அனைத்து பட்டதாரிகளும் ஆக்ரோசமாக சத்தமிட்டவண்ணம் கலைந்தார்கள்.


இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள்  நவம்பரில் நடைபெறவிருக்கும்நேர்முகப்பரீட்சைக்கெதிராக உயர்நீதிமன்றில்இடைக்கால தடையுத்தரவொன்றைபெறுவதற்க பிரபல சட்டத்தரணியூடாக பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள்
எனத் தெரியவருகின்றது.01ஆம் திகதி இந்த உத்தரவு பெரும்பாலும்கிடைக்கலாமென நம்பப்படுவதாக ஒரு பட்டதாரி தெரிவித்தார்.

இதேவேளை திருமலை மாவட்டபட்டதாரிகள்  (30) திஙகட்கிழமை கிழக்கு மாகாணஆளுநரைச்சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மொத்தத்தில் கிழக்கின் 3 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


Comments