30.11.19- காரைதீவு விபுலாநந்தாவில் ஓஎல் தினவிழா..

posted Nov 29, 2019, 5:21 PM by Habithas Nadaraja
காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியின் வருடாந்த ஓஎல் தினவிழா (27.11.2019) கல்லூரி அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் விபுலாநந்த அரங்கில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்துசிறப்பித்தார். கௌரவஅதிதியாக பழையமாணவர்சங்கச்செயலாளர் வி.விஜயசாந்தன் கலந்துகொண்டார்.

நிகழ்வில் மாணவர்களது கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மேடையேறின. பிரதி அதிபர் பா.சந்திரேஸ்வரன் உதவிஅதிபர் ம.சுந்தரராஜன் ஆகியோரும் உரையாற்றினர்.

க.பொ.த. சாதாரணதர பிரிவுப்பொறுப்பாசிரியர் கே.ஜெயமோகனின் வழிகாட்டலில் இவ்விழா சிறப்பாக இடம்பெற்றது.

(காரைதீவு  நிருபர்)


Comments