07.01.18- காரைதீவு பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல்கிளைக் காரியாலயம் திறந்து வைப்பு..

posted Jan 7, 2018, 1:28 AM by Habithas Nadaraja   [ updated Jan 7, 2018, 1:40 AM ]
உள்ளுராட்ச்சி சபைத் தேர்தல் 2018 காரைதீவு பிரதேசசபைக்காக போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல்கிளைக்காரியாலயம்  காரைதீவு பிரதேசத்தில் நேற்றைய தினம் (06.01.2018) பிரதேச கட்சி இணைப்பாளர் V.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளுராட்ச்சி மற்றும் மாகாணசபை இராஜாங்க அமைச்சர் திருமதி சிறியானி விஜேவிக்கிரம  அவர்கள் கலந்துகொண்டார்.இன் நிகழ்வில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்,கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments