08.10.17- ஞாபக சக்தி குறைபாடு உள்ளவரா நீங்கள்..

posted Oct 7, 2017, 7:16 PM by Habithas Nadaraja

இன்றைய பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுள் ஒன்று ஞாபக சக்தி குறைபாடு. 

நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். தக்காளி, காரட், திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். 

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

பி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.

மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.

ஞாபக சக்தி பெருக கண்ட.. கண்ட டானிக்குகளை தவிர்த்து. இயற்கையான உணவுகளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்க. 


05.03.17- கறிவேப்பிலை..

posted Mar 4, 2017, 7:06 PM by Habithas Nadaraja

மூலிகை மந்திரம்

நம் வீட்டில் உள்ள பொருட்கள், வீட்டுத் தோட்டத்திலும் சாலை ஓரங்களிலும் கிடைக்கும் செடிகள், கடையில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள் என எளிமையான, பாதுகாப்பான, குறைந்த செலவிலான மருத்துவத்தைப் பற்றியே இந்த தொடரில் பார்த்துவருகிறோம்.
அந்த வரிசையில் இந்திய உணவில் முக்கிய அங்கம் வகிக்கும் கறிவேப்பிலை பற்றி தெரிந்து கொள்வோம்.இந்தியா மற்றும் அந்தமான் தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்டது கறிவேப்பிலை. இது பெருவாரியாக தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிரா மற்றும் சில வட மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. மலைகள், காடுகள், வீட்டுத்தோட்டங்கள் என்று எங்கும் இது பயிரிடப்படக் கூடியதாகும். அடர்ந்த பசுமையான இலைகளையும், நறுமணத்தையும் கொண்டுள்ளதால் இதை வீட்டுத்தோட்டங்களில் அழகுக்காகவும் வளர்ப்பதுண்டு.

கறி வகைகளிலும் குழம்பு, ரசம், நீர்மோர் ஆகிய உணவு வகைகளிலும் இதைத் தவறாமல் தாளிதமாகச் சேர்ப்பர். எனவே, இதற்கு ‘தாளிப்பின் ராணி’ என்று செல்லப்பெயர் உண்டு. மேலும், உணவாக கீரை வகைகளில் ஒன்றாகவும் உபயோகப்படுகிறது. கீரைகளில் முக்கிய இடம் வகிப்பதால் கறிவேப்பிலையைக் ‘கீரைகளின் தாய்’ என்று கூட அழைப்பர்.Murraya Koenigii என்பது கறிவேப்பிலையின் தாவரப்பெயர் ஆகும். Curry leaves என்பது ஆங்கிலப்பெயர் ஆகும். ‘சுரபி நிம்பா’, ‘கலசகா’, ‘மகாநிம்பா’ என்றெல்லாம் வடமொழியில் குறிப்பர். ‘கறிவேம்பு’ என்றும் தமிழில் அழைப்பதுண்டு.கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்:உண்ணும்போது தேவையில்லாதது என்று தூக்கி ஓரமாக வைக்கும் கறிவேப்பிலைக்கு இத்தனை சக்தி உண்டா என்று தெரிந்தால் ஆச்சரியம் மிகும்!

கறிவேப்பிலை மரத்தின் அத்தனை பாகங்களும் மருத்துவப் பயனும், மணமும் வாய்ந்தவை ஆகும். இதன் பாகங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருவதாக அமைந்துள்ளன. இதன் இலை வயிற்றுக் கோளாறுகளுக்கு கை கண்ட மருந்தாகிறது. புரோட்டோசோவா என்னும் கிருமிகளைக் கொல்வதில்(Antiprotozoal) முதலிடம் வகிக்கிறது.இக்கிருமிகள் வயிற்றுப்போக்குக்குக் காரணமாகும் நுண்கிருமிகள் ஆகும். மேலும், வயிற்றுக்கடுப்பை போக்கக்கூடிய மருந்தாகவும் கறிவேப்பிலை பயன்படுகிறது. கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதால் பசியைத் தூண்டுவதோடு சீரான செரிமானத்துக்கும் துணையாகிறது. நோய்க்கிருமிகள் எதுவாய் இருப்பினும் கறிவேப்பிலை எதிர்த்து நிற்கவல்லது.

சீதபேதியைக் குணப்படுத்துவதில் சிறந்தது. கறிவேப்பிலை மேற்பூச்சாகப் பயன்படுத்தும்போது வேர்க்குரு, கொப்புளங்கள் போன்ற பல சரும நோய்களையும் போக்கும் திறன் வாய்ந்தது. மலத்தை இளக்கக்கூடியது, குளுமைத்தன்மை வாய்ந்தது, வலிைம ஊட்டக்கூடியது, பித்தம், கபம், வீக்கம் இவற்றைப் போக்கக்கூடியது. மூளைக்கு பலத்தைத் தருவதோடு ஞாபக சக்தியையும் வளர்க்கும் குணமுடையது. 

கறிவேப்பிலை விஷக்கடிகளுக்கும் மருந்தாகும் என்பதால் வண்டுக் கடி, தேள் கடி, பாம்புக் கடி மற்றும் விலங்குகள் கடித்ததால் வந்த விஷத்துக்கு இதை மேற்பூச்சாகவும் உள்ளுக்கும் பயன்படுத்தலாம். இலையை உள்ளுக்கு சாப்பிட வாந்தியை நிறுத்தும். கறிவேப்பிலை யின் பட்டையும், வேர்ப்பகுதியும் உடலின் உள்ளுறுப்புகளைத் தூண்டும்படியாக மருத்துவர்கள் பயன்படுத்துவர்.கறிவேம்பின் குச்சிகள் ஆலங்குச்சி, கருவேலங்குச்சி போல பல் துலக்கப் பயன்படுகிறது. சோர்வு, திசுக்களின் அழிவு இவற்றைப் போக்குவதில் கறிவேம்பின் அனைத்து பாகங்களும் சிறந்து விளங்குகின்றன.

குறிப்பாக, திசுக்களின் மாற்றம், சர்க்கரை நோய், ருமாட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் போன்ற நோய்களால் ஏற்படும் தீங்கு களை எதிர்த்து நிற்கக்கூடியது. இதிலுள்ள ‘முராயாசினின்’ என்னும் வேதிப்பொருள் நோய் நீக்கும் மருந்தாகவும், கிருமி நாசினியாகவும், பூஞ்சைக்காளான் கொல்லியாகவும் பயன்படுகிறது.கறிவேம்பின் இலைகளில் மிகுதியாக ‘கார்பஸோல் ஆல்கலாய்ட்ஸ்’ உள்ளது. மேலும், ‘கௌமாரின் குளூகோசைட்ஸ்’, ‘ஸ்கோப்போலின்’ ஆகிய மருத்துவப் பொருட்களும் அடங்கியுள்ளன. இலையில் ‘பீட்டா கரோட்டின்’ எனும் சத்துப்பொருள் மிகுந்துள்ளது.கறிவேப்பிலையை வேக வைக்காமலோ, பொரிக்காமலோ சாப்பிடும்போது நமக்கு ‘பீட்டா கரோட்டின்’ சத்து முழுமையாகக் கிடைக்கிறது. பீட்டா கரோட்டின்தான் வைட்டமின் ‘ஏ’ சத்து உருவாகக் காரணமாகிறது. வைட்டமின் ‘ஏ’ சத்து கண்கள், பற்கள், எலும்புகள், தோல் ஆகியவற்றுக்கு ஊட்டச்சத்தாக அமைகிறது.கறிவேம்பின் பட்டையினின்று எடுக்கப்படும் சத்தானது வீக்கத்தைக் கரைக்கும் தன்மை உடையது. கறிவேம்பின் பழங்கள் உணவாக உண்ணக் கூடியவை. சுவையுள்ளவையும் கூட. பழங்களும் வைட்டமின் ‘ஏ’ மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களை உள்ளடக்கியது.பழங்களின் சதைப்பகுதி 64.9% ஈரப்பதம் உடையது. 9.76% சர்க்கரை சத்து உள்ளடக்கியது. 13.35 மி.லி. அளவு வைட்டமின் ‘சி’ சத்தைப் பெற்றுள்ளது. 100 கிராம் பழச்சதையில் 1.97 கிராம் புரதமும், 0.82 கிராம் பாஸ்பரஸும், 0.811 கிராம் பொட்டாசியமும், 0.166 கிராம் கால்சியமும், 0.216 கிராம் மெக்னீசியமும், 0.007 கிராம் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளன.

கறிவேப்பிலையின் மருத்துவப் பயன்கள்:
‘வாயினருசி வயிற்றுளைச்ச வீடுசுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய
மருவேறு காந்தளங்கை மாதே! உலகிற்
கருவேப் பிலையருந்திக் காண்.’

அகத்தியர் குணபாடம்

மேற்கூறிய பாடலில் இருந்து கறிவேப்பிலையை உண்பதால் வாய் ருசியின்மை, வயிற்று உபாதைகள், நீண்ட நாட்களாக விடாது வாட்டுகிற காய்ச்சல், பித்த மயக்கம் ஆகியன குணமாகும் என்று தெரிய வருகிறது.

*கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி அத்துடன் போதிய மிளகு, உப்பு, சீரகம், சுக்கு போன்றவற்றையும் சேர்த்துப் பொடித்து வைத்துக் கொண்டு குழம்பு, ரசம் ஆகியவற்றுக்கு முன்பாக சுடுசோற்றோடு சேர்த்து சிறிது நல்லெண்ணெயோ, நெய்யோ கலந்து உண்ண வயிற்று மந்தம், மந்தபேதி, மலக்கட்டு, நீரிழிவு ஆகியன விலகும்.20 கிராம் கறிவேப்பிலையுடன், 3 கிராம் சீரகம், 2 கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ேமாரில் கலந்து சில நாட்கள் குடித்து வர உஷ்ண பித்தம், கருப்பைச் சூடு குணமாகும். கறிவேம்பிலுள்ள ‘கார்பஸோல் ஆல்கலாய்டுகள்’ கருமுட்டை உற்பத்தியைத் தூண்டி பிள்ளைப்பேற்றுக்கும் துணை நிற்கின்றன.

*ஐந்தாறு கறிவேப்பிலை இலையோடு வயதுக்குத் தக்கபடி 1 முதல் 3 மிளகு வரை சேர்த்து அரைத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து குழந்தைகளை நீராட்டிய பின் உள்ளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு மந்தம் நீங்கி பசியுண்டாகும்.

*கறிவேப்பிலை ஈர்க்கோடு சிறிது முலைப்பால் சேர்த்து நசுக்கிப் பிழிந்து, சிறிது இலவங்கமும் திப்பிலியும் சேர்த்துக் கொடுக்க வாந்தி நிற்கும். பசி உண்டாகும்.

*கறிவேப்பிலையோடு தேங்காய், உப்பு, புளி, பருப்பு சேர்த்து துவையலாக அரைத்து உணவோடு சேர்த்து உண்ண வயிற்றிலுள்ள வாயு வெளியேறும். பித்தம் போகும். பசி மிகும்.

*கறிவேப்பிலையோடு நீர் சேர்த்து சங்கு கொண்டு இழைத்து முகப்பருக்கள் மீது பூசி வர பருக்கள் நாளடைவில் மறையும். இதையே சிறிது மோரில் கலந்து குடிக்க வயிற்றுக்கடுப்பு குணமாவதுடன் சீதபேதியும் குணமாகும்.

*ஒரு பங்கு கறிவேப்பிலையுடன் கால்பங்கு அரிசித் திப்பிலி சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு இரண்டு வெருகடி அளவு(சுமார் 5 கிராம்) என சாப்பிட்டு வர சர்க்கரைநோய் குணமாகும். சர்க்கரை நோய்க்கு இது ஒரு துணை மருந்தாக அமையும்.

*சிறிதளவு கறிவேப்பிலையுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள், கசகசா, லவங்கப்பட்டை ஆகியவற்றைச் சேர்த்து மைய அரைத்து அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகளின் மீதும், பிரசவித்த பின் ஏற்பட்ட வரிவடிவ தழும்புகளின் மீதும் பூசி வர நாளடைவில் அவை மறையும்.

*நல்ல சாறுடன் கூடிய புதிதான கறிவேப்பிலை இலை ஒரு பிடி எடுத்து அரைத்து அத்துடன் சுமார் 20 கிராம் அளவுக்கு ஆலம் விழுதும், 20 கிராம் அளவுக்கு வெந்தயமும் சேர்த்து, 500 மி.லி. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவி வர தலைமுடி கருமை பெறும். செழுமையுடன் நீண்டு வளரும்.

*கறிவேப்பிலையைத் துவையலாகவோ சோற்றிலிடும் பொடியாகவோ அன்றாடம் சாப்பிட்டு வர ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டிக்கும் ஆற்றல் உடையது. ேமலும், இதய நோய்களைத் தடுப்பதாகவும் அமைகிறது.

*நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் 10 இலைகளும், மாலையில் 10 இலைகளும் மென்று தின்பதால் ரத்தத்தில் உள்ள
சர்க்கரை அளவு மட்டுப்படும். சளியும் குறையும். குரல் மென்மையடையும்.

*கறிவேப்பிலையுடன் துவரம்பருப்பு, இஞ்சி, சீரகம், பெருங்காயம் கலந்து பொடித்து சாப்பிட்டு வர வாய்வு, சீதளம், காரணமாக உண்டான இடுப்புப் பிடிப்பு, கை, கால்கள், தொடைப் பகுதியில் ஏற்பட்டு பிடிப்பு கள், வலி ஆகியன குணமாகும்.

*கறிவேப்பிலையை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து விழுதாக்கி தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வர பொடுகு, பேன் தொல்லைகள் போகும். தலைமுடி வளம் பெறும்.

*கறிவேப்பிலையோடு மஞ்சளும், சீரகமும் சேர்த்து அரைத்து உள்ளுக்கு மோரில் கலந்து கெடுக்க சித்தப்பிரமை குணமாகும்.

*மூளைத் திசுக்கள் செயல்குன்றாமல் இருக்க மூளையைப் பயன்படுத்தி வேலை செய்பவர்கள் அன்றாடம் கறிவேப்பிலையை உணவுடன் சேர்க்க வேண்டும்.05.03.17- உள்ளுறுப்புகளை பலப்படுத்தும் சிவப்பரிசி..

posted Mar 4, 2017, 7:00 PM by Habithas Nadaraja

வேப்பம்பூ மற்றும் சிவப்பரிசி பற்றி இன்று பார்க்கலாம்.வேப்பம் பூவானது பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கி, தொடர் மருத்துவ பயன்பாட்டில் இருந்து வருகிறது.கோடைக்காலத்தில் கிடைக்கின்ற வேப்பம் பூவினை சுத்தம் செய்து காயவைத்து கொண்டால் ஒரு வருடம் வரைக்கும் மருந்தாக பயன்படுத்தி கொள்ளலாம். இதனை துவையல் அல்லது ரசமாக எடுத்துக்கொண்டால், உடல் சோர்வு, தளர்வு, செரிமான கோளாறு ஆகியவற்றை நீக்குகிறது. சிறந்த பித்த சமனியாக செயல்பட்டு, அதிக பித்தம் சுரப்பதால் ஏற்படும் அரிப்பு மற்றும் ஈரல் வீக்கத்தை சரிசெய்யும் மருந்தாக உதவுகிறது. தற்போது காய்ந்த வேப்பம்பூவினை பயன்படுத்தி ரசம் செய்வது பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வேப்பம்பூ(உலர்ந்தது), புளிகரைசல், மஞ்சள் பொடி, கடுகு, பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து பொடி செய்த கலவை, வரமிளகாய், கொத்தமல்லி, நெய், பெருங்காயப்பொடி, உப்பு.பாத்திரத்தில் நெய்விட்டு உருகியதும், பெருங்காயப்பொடி, கடுகு, வரமிளகாய், வேப்பம்பூ ஆகியன சேர்த்து நெய்யில் பொரிய விடவும். இதனுடன் புளி கரைசல், சிறிது மஞ்சள்பொடி, உப்பு, கலவை மற்றும் நீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், அதனுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். இதனை மாதம் ஒரு முறை பருகி வருவதால் வயிற்று பூச்சி தொல்லைகளில் இருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். குழந்தைகள் இதனை அருந்துவதால் பூச்சுகள் அழிக்கப்பட்டு, நல்ல சுறுசுறுப்பை கொடுக்கும்.

வேப்பம் பூ செரிமான கோளாறுகளை நீக்கி, பசியை தூண்டுகிறது. குருதியில் படிகின்ற கொழுப்புகளை அகற்றுகிறது. வயிற்று பூச்சிகளால் மயக்கம் போன்ற பிரச்னைகளில் இருந்து குழந்தைகளுக்கு நிவாரணம் கொடுக்கிறது.இதேபோல் கைகுத்தல் அரிசிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படும் சிவப்பு அரிசியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக வைட்டமின் ஏ, இ, புரதசத்து, மாவு சத்தும் நிறைந்து காணப்படுகின்றன. அரிதாக நாம் உணவில் பயன்படுத்தும் சிவப்பு அரிசியினை பயன்படுத்தி காப்பரிசி தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.தேவையான பொருட்கள்: சிவப்பு குத்தல் அரிசி(கழுவி, உலரவைத்தது), தேங்காய் துண்டு, ஏலக்காய் பொடி, பொட்டுக்கடலை, வெல்லப்பாகு, நெய்.கடாயில் நெய் விட்டு தேங்காய் துண்டுகளை வறுத்துக்கொள்ளவும். பின்னர் அகன்ற பாத்திரத்தில் சிவப்பு அரிசி, வெல்லப்பாகு, ஏலக்காய் பொடி, பொட்டுக்கடலை, வறுத்த தேங்காய் துண்டு மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறவும். உமி நீக்கிய சிவப்பு குத்தல் அரிசியில் வைட்டமின் இ, புரதசத்து, இரும்பு சத்து, பொட்டாசியம் என்ற உப்பு சத்து, மாவு சத்து நிறைந்து உள்ளது. இந்த உணவை குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கிறது. சீதள நோய்கள் சரிசெய்யப்படுகிறது. இதில் தேங்காய் சேர்த்து உண்பதால் குடல் புண்கள் ஆற்றப்படுவதோடு, உள்ளுறுப்புகள் பலமடைகிறது.


05.03.17- பறவைகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும்..

posted Mar 4, 2017, 6:56 PM by Habithas Nadaraja

இந்த காலத்தில் அதிகரித்து வரும் செல்போன் டவர்கள் மற்றும் மரங்களை அழிப்பது ஆகிய காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது. அதில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

இதுதவிர வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து எக்ஸீடர் பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் காக்ஸ் “நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.


24.12.16- சித்த மருத்துவ குறிப்புகள்..

posted Dec 24, 2016, 12:47 AM by Habithas Nadaraja   [ updated Dec 24, 2016, 12:48 AM ]


பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள் நம்மை அண்டாது பாதுகாக்க இயலும். அப்படியும் அவ்வப்போது ஏற்படும் சிறு உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது. 

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். 

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும். 

வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். 

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். 

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். 

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வறட்டு இருமல் 

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள் நம்மை அண்டாது பாதுகாக்க இயலும். அப்படியும் அவ்வப்போது ஏற்படும் சிறு உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது. 

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். 

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும். 

வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். 

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். 

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். 

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வறட்டு இருமல் 

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

24.12.16- சிறுகுறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து..

posted Dec 24, 2016, 12:45 AM by Habithas Nadaraja

சிறுகுறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும் தன்மை உடையது. கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாய் இலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த பகுதிகளில் இது அதிகம் வளர்கிறது.

இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை. இந்த இலைகள் நாக்கின் இனிப்பு சுவையை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்யும் தன்மை உடையது. இலைகள் மிக முக்கிய மருத்துவபயன் கொண்டவை. நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது.

இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. மேலும் கணையத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பியினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது. விதைகள் வாந்தியினைத் தூண்டக் கூடியது.

சளியினை போக்க வல்லது. வேர்ப்பகுதி இருமலுக்கு சிறந்த மருந்து. வயிற்று வலியினை போக்கி வலுவினைத் தருகிறது. குளுமைப்படுத்தும் செயல் கொண்டது. சிறுநீர் போக்கினை தூண்ட வல்லது. மாதவிடாயினை தடுக்கக்கூடியது. வயிற்று வலியினை போக்க உதவுகிறது. சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.

இவர்கள் குறிஞ்சாக் கீரையை பாசிப் பருப்புடன் சேர்த்து காரம் சேர்க்காமல் வேகவைத்து கடைந்து நெய் கலந்து உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் விரைவில் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். குறிஞ்சாக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயின் தாக்கம் ஏதுமின்றி நல்ல வலுவுள்ள உடலைப் பெறலாம்.

சிலர் எப்போது பார்த்தாலும் பசியில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தினமும் குறிஞ்சாக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து உணவில் சேர்த்துக்கொண்டால் நன்கு பசியைத் தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வாரம் இருமுறை குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும். கடும் சுரம், இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிஞ்சாக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வருவது நல்லது. குறிஞ்சாக் கீரையை வேகவைத்து அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஈரலில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

24.12.16- நீங்கள் கறுப்பா? கவலையை விடுங்கள் இதோ உங்களுக்கான ஆலோசனை..

posted Dec 24, 2016, 12:38 AM by Habithas Nadaraja


கறுப்பான சருமம் என்பது  இரண்டாம்பட்சமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைதான். கறுப்பு என்பது வெறுக்கத்தக்க நிறமில்லை. தமிழர்களின் உண்மை நிறமே கறுப்புதான். கறுப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கறுப்பான பெண்கள் களையாக மாற சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.

பப்பாளி, தோடம்பழ  பேஷியல்
முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும். சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறிவிடும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை தோடம்பழ சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.
நன்கு கனிந்த  வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், தோடம்பழ சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற விட்டுக் கழுவி வர, நிறம் பளிச் என்று மாறும்.

முட்டைகோஸ் பேஷியல்
காய்கறி பேஷியலுக்கும் முதலில் காய்ச்சாத பாலால் முகத்தைத் துடைக்கவும். பின்னர் முட்டைக் கோஸை பச்சையாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வடிகட்டி சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்யவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ முகம் பளிச் தோற்றத்துடன் காணப்படும்.
இந்த இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

குங்குமாதி தைலம்
சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம். இதனால் கறுப்பான சருமம் களையாகும்.
ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்யவும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டும். இதனால் முகம் நிச்சயம் பொலிவாகும். வெயிலில் செல்கிற போது சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். அதேபோல் கைகளுக்கு கிளவுஸ் அணிவது சருமத்தை பாதுகாக்கும்.

குங்குமப்பூ
சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும். இதனால் சரும நிறத்தில் பொலிவு கூடும். அதேபோல் பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

24.12.16-அழகுக் குறிப்புகள்

posted Dec 24, 2016, 12:34 AM by Habithas Nadaraja


சந்தனம், முல்தானிமட்டி கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.
* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.
* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.
* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

16.12.16- மகிழூர்முனை முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் ஒளிவிழாநிகழ்வு..

posted Dec 15, 2016, 5:34 PM by Habithas Nadaraja   [ updated Dec 15, 2016, 5:44 PM ]

முன்பள்ளிநிர்வாகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றஒளிவிழாநிகழ்வு இன்று(15) பிற்பகல் 3.30 மணியளவில்,மகிழூர்முனைமெதடிஸ்த சில்வவெஸ்ட் மண்டபத்தில் முகாமை குரு அருட்செல்வி.ஜோதினிசீனித்தம்பிஅவர்களின் தலைமையில் வெகுசிறப்பாகநடைபெற்றது.

இந்நிகழ்வில் வணக்கத்துக்குரியசகோதரர் பரமானந்தன்,அல்பேட் சீவரெத்தினம்,மகிழூர் கிழக்குகிராமஉத்தியோகத்தர் இ.மதிதரன், மகிழூர்முனைகிராமநிலதாரிஎஸ்.உதயகுமார் போன்றோர் அதிதிகளாககலந்துகொண்டனர்.

முன்பள்ளிமாணவிபீ.றேச்சில் நிம்சியின் வரவேற்புநடனத்துடன் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின.அதனைத் தொடர்ந்து இயேசுகிறிஸ்துவின்  தேவமகிமையையும் இறையாட்சியையும் வெளிப்படுத்தும் கரோல் இன்னிசைகீதங்களும், நடனம், கதை, பேச்சு,கோலாட்டம்,கவிதைபோன்றகலைநிகழ்வுகள் முன்பள்ளிமற்றும் ஞாயிறுபாடசாலைமாணவர்களால் அளிக்கைசெய்யப்பட்டன.  
முகாமை குரு அருட்செல்வி.ஜோதினிசீனித்தம்பிஅவர்களால்திருவிவிலியத்தின் இறைசெய்திஅருளப்பட்டது.

அதிதியாககலந்துகொண்டஅல்பேட் சீவரெத்தினம் தனதுஉரையில் இச்சிறுவர்களைப் போலநாம் அனைவரும் எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் தீயசிந்தனைகளைகளைந்துஒற்றுமையாகபழகுவதுடன் உயிர்களிடத்திலும்அ ன்பு செலுத்துபவர்களாக இருக்கவேண்டுமெனவும்எமதுபாவத்தில் இருந்தஎம்மைமீட்டுதேவனுடன் ஒப்புரவாக்கவே இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்குவந்தார் எனவும் பாவத்தின் பிரதிபலனானமரணத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் எம்மைமீட்டுசுகம்,சமாதானம்,நித்திய ஜீவன் என்பவற்றை எமக்குஅளிப்பதற்காகவேவந்துள்ளார் என்றும் சுமார் 2000 வருடங்களுக்குமுன்பதாகபெத்லகேம் எனும் சிறியஊரில் இடம்பெற்றகிறிஸ்து இயேசுவின் பிறப்பானதுமானிடவரலாற்றின் ஒருதிருப்புமுனையாக இருந்துள்ளதுஎன்றுகுறிப்பிட்டார்.   

நிகழ்வின் இறுதியாககலைநிகழ்ச்சிகளில் பங்குகொண்டமுன்பள்ளிபாடசாலைமாணவர்களுக்குஅதிதிகள்மற்றும்நத்தார் பாப்பாவினாலும் பரிசுப்பொருட்கள்வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலைமுன்பள்ளிமற்றும் ஞாயிறுபாடசாலைமாணவர்கள்,சிறுவர்கள்,பாடசாலைமாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலைஅதிபர் ஆசிரியர்கள்,கிராமஅபிவிருத்திச் சங்கதலைவர்உ றுப்பினர்கள், ஆலயதலைவர்கள்விளையாட்டு அமைப்புகள், சமூகஆர்வலர்கள் ,ஊடகவியலாளர்கள் சமூகநலன்விரும்பிகள் உள்ளிட்டபலதரப்பட்டோர் இதன்போதுகலந்துகொண்டனர்.

துறையூர் தாஸன்
16.12.16- தேசிய உற்பத்தித் திறன் தேர்வுகளில் நான்காவது தடவையாகவும் உள்நுழைந்தகளுவாஞ்சிக்குடிஆதாரவைத்தியசாலை..

posted Dec 15, 2016, 5:18 PM by Habithas Nadaraja   [ updated Dec 15, 2016, 5:44 PM ]

இலங்கையிலுள்ளஅரச,அரசசார்பற்றநிறுவனங்கள் மற்றும்மாகாண அமைச்சுக்களிடையே உள்ளபாடசாலைகள், வைத்தியசாலைகள், சுகாதாரசேவைநிலையங்கள்,தொழிற்சாலைபோன்றவற்றில் நடாத்தப்பட்டதேசியஉற்பத்தித் திறன் தேர்வுகளில் தெரிவுசெய்யப்பட்ட நிலையங்களுக்கானஉற்பத்தித் திறன் ஊக்குவிப்புவிருதுவழங்கும் நிகழ்வு இரத்மலானை ஸ்ரீபன் ஸ்டூடியோ இல் பெரும் பிரமாண்டகலைநிகழ்ச்சிகளுடன் கூடியதாக இன்று(14) நடைபெற்றது.

உற்பத்தித் திறனில் மேன்மையுற்றுசிறந்தசேவையைமக்களுக்குவழங்கும் அரசமற்றும் தனியார் நிறுவனங்களுக்கான போட்டிகளைபொதுநிர்வாகஅமைச்சுஆண்டுதோறும் தேசியரீதியில்நடாத்திவருகின்றது.பொதுநிர்வாகஅமைச்சுநிறுவனங்களுக்குவிஜயம் செய்துநிறுவனத்தின்சேவைகளின் தரம்,செயற்பாடுகளின் வினைத்திறன், முகாமைத்துவம், மேம்படுத்தல், தலைமைத்துவம், பாவனையாளர்திருப்தி,பாதுகாப்புபோன்றபல்வேறுவிடயங்களைபரீட்சித்துநிறுவனங்களைதரப்படுத்துகின்றது.

ந்தவகையில் கடந்த மூன்றுவருடங்களாகதேசியஉற்பத்தித் திறன் போட்டியில் தடம் பதித்து வெற்றியீட்டிய களுவாஞ்சிக்குடிஆதாரவைத்தியசாலை இம்முறையும் தேசியரீதியில் இரண்டாம் இடத்தினைதட்டிக்கொண்டுள்ளது.நேற்றையதினம் விருதுவழங்கல் நிகழ்வின்போது இவ்வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் அவ் விருதினைவைத்தியசாலையின் சார்பாகதனதாக்கிக்கொண்டார்.

தேசியஉற்பத்தித் திறன் தேர்வுகளில் முதலாவதுதடவைதரவட்டதேர்வில் விசேடவிருதினையும் இரண்டாவதுதடவைதேசியரீதியில் மூன்றாம் இடத்தினையும் மூன்றாவதுதடவைதேசியரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று இம்முறை(2015)தேசியரீதியில் இரண்டாம் இடத்தினைதட்டிக்கொண்டுள்ளதுஎன்றால் மிகையாகாது.

கௌரவஅதிமேதகுசனாதிபதிமைத்திரிபாலசிறிசேனஅவர்களுடன் ஆரம்பமானஇந்நிகழ்வில் பொதுநிர்வாகஅமைச்சர் மத்துகமபண்டார,கௌரவஅமைச்சர்களானநிமல் சிறிபால டீசில்வா, ஏ.எச்.எம்.பௌசி, கிழக்குமாகாணதவிசாளர்ஆரியவதிகலப்பதி, அலுவலகசெயலாளர்கள்,நிறுவனபணிப்பாளர்கள் எனபெருந்தொகையானவர்களுடன் நூற்றுக்கணக்கானநிறுவனங்களும் பங்குபற்றியிருந்தனமட்டக்களப்புமாவட்டத்தில் கடந்தசிலவருடங்களாகமக்களின் வைத்தியச் சேவையில் தடம்பதித்து வருகின்ற களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலைஇம்முறைதேசியரீதியில் இரண்டாம் இடத்தினை சுவீகரித்துக்கொண்டது வைத்தியசாலை நிர்வாகதலைமைத்துவத்திற்கும் வைத்தியசாலைசமூகத்துக்கும் பெருமையைஅளிக்கின்றதுஎன்றால் மிகையாகாது.

துறையூர் தாஸன்

1-10 of 200