இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்றான சந்திர கிரகணம் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து அது முழுமையாக மறைக்கப்படும் அற்புத நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். இவ்வாறு நிகழ்ந்தது மிகவும் குறுகிய நேர சந்திர கிரகணம் ஆகும். 100 ஆண்டுகளுக்கு முன்பு தான் இதே போன்ற குறுகிய நேர சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இந்தியா மட்டுமின்றி வட அமெரிக்கா, ஹாவாய், ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா மற்றும் ஆசியாவின் கிழக்கு பிராந்தியங்களில் வாழும் மக்கள் சந்திர கிரகணத்தை தரிசித்தனர். குறிப்பாக லாஸ் ஏஞ்ஜல்சில் நள்ளிரவு 12.58 முதல் 1.03 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்ந்ததால் நிலா ரத்தச் சிகப்பான நிறத்தில் மாறும் அற்புதக் காட்சியை அமெரிக்க மக்கள் தெளிவாகக் கண்டு களித்தனர். ஆனால் இந்தியாவின் பல பகுதிகளில் பகுதியான சந்திர கிரகணமே தெரிந்தது. இருப்பினும், சென்னை பிர்லா கோளரங்கத்தில் தொலை நோக்கியின் உதவியுடன் அன்று மாலை 6.30 மணியிலிருந்தே சந்திர கிரகணத்தைக் காண ஆவலுடன் காத்திருந்த சிறுவர்கள் பலர், சில நொடிகள் என்றாலும் ரத்தச் சிகப்பு நிறத்தில் நிலா மாறும் அற்புதக் காட்சியை கண்டு வியந்துள்ளனர். |
வீடியோ >