11.12.16- துறைநீலாவணைபொது நூலகவளாகம் கால்நடைகளின் உறைவிடமாக மாறியுள்ளது..

posted Dec 11, 2016, 8:44 AM by Habithas Nadaraja   [ updated Dec 11, 2016, 10:23 AM ]
மண்முனைதென் எருவில் பற்றுபிரதேசசபைக்குட்பட்ட,துறைநீலாவணை 05 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள பொதுநூலகத்துக்கு சுற்றுமதில் அமைப்பதற்குஆயத்தமாக இருந்தபணத்தைகளுதாவளைபிரதேச சபை வேறுஒருதிட்டத்திற்குமாற்றியுள்ளது.
நீண்டகாலமாகசுற்றுமதில் இல்லாததன் காரணமாகமாரிகாலஇரவுவேளைகளில்; கால்நடைகள் ,பொது நூலகத்தைமற்றும் பொதுநூலகவளாகத்தைதங்களதுஉறைவிடமாகபயன்படுத்திஅசுத்தம் செய்துவருவதாகவாசகர்களும்,பொதுமக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

துறைநீலாவணை 05 ஆம் வட்டாரகிராமஅபிவிருத்திச் சங்கத்தினரும்பொதுமக்களும் ,வெகுவிரைவில் பொது நூலகத்துக்குசுற்றுமதில் அமைத்துத் தருமாறுசம்பந்தப்பட்டஉரியஅதிகாரிகளிடம் கோரிக்கைவிடுக்கின்றனர்.

துறையூர் தாஸன்
Comments