12.12.16- மீண்டும் யாழில் இளைஞர்களின் எழுச்சி..

posted Dec 11, 2016, 6:03 PM by Habithas Nadaraja
கடந்த புரட்டாதி மாதம் யாழில் பாரதியாரின் நினைவு தினம் வித்தியாசமான முறையில் இளைஞர்களால் அனுஷ்டிக்கப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே; 
 
யாரும் எதிர்பார்க்காத வகையில் இளைஞர்களால் மீண்டும்     நல்லூரில் அமைந்துள்ள பாரதியார் சிலையானது வர்ணத் தீந்தைகளால் எழில் ஊட்டப்பட்டு புதுமை கவியின் பிறந்த தினத்தை(11.12.2016) கொண்டாடும் விதமாக மலர்மாலை அணிவிக்கப்பட்டு  இழந்த இயற்கையை அரவணைக்கும் வகையில் நிகழ்வில் பங்கு கொண்டவர்களுக்கும் பொது மக்களுக்கும் பசு மரகன்றுகள் வழங்கப்பட்டமை அனைவரையும் கவர்ந்திருந்தது குறிப்பிடதக்கது.

இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான இளைஞர்களின் செயற்பாடுகளை வரவேற்கவேண்டியது எமது சமூக பொறுப்பாகும்.

இளைஞர்கள் அனைவருக்கும் எமது இணையம் சார்பாக நல்வாழ்த்துக்கள்!

 ஐ.சிவசாந்தன் 
Comments