பௌர்ணமிகலைநிகழ்வுத் தொடர் -23ஐ சிறப்பிக்கும் வகையில் மட்டுமாநகரசபையின் அனுசரணையுடன் மகுடம் கலை இலக்கியவட்டம் நடாத்தும் கவிஞர் ஜி.எம்.பரஞ்சோதியின் நாங்கள் விட்டில்கள் அல்லஎனும் கவிதை நூல் அறிமுகநிகழ்வு இன்று(13) மாலை 4.00 மணிக்கு மட்டு பொது நூலக கேட்போர்கூடத்தில் கலாபூசணம் செ.எதிர்மன்னசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில்மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் பிரதம அதிதியாகவும் மட்டுமாநகர ஆணையாளர் மா.உதயகுமார் முன்னிலைஅதிதியாகவும் தோழர் ஆர்.ராஜேந்திரா சிறப்பு அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளார் நாங்கள் விட்டில்கள் அல்லஎனும் கவிதை நூலுக்கானவெளியீட்டுரையினை,பிரபலஆய்வாளரும் ஊடகவியலாளருமான திருமலை நவம் அவர்களும் நயவுரையினைபதிப்பகதிணைக்களமுன்னாள் பணிப்பாளர் ஆகவே– ஜபார் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். இந்நிகழ்வுக்கானநிகழ்ச்சித் தொகுப்பினைகவிஞர் கதிரவன் த.இன்பராசாவும் வரவேற்புரையினைமகுடம் வி.மைக்கல் கொலினும் நன்றியுரையினைகவிஞர் தில்லைநாதன் பவித்திரனும்நிகழ்த்தவுள்ளதுடன் மட்டக்களப்புதேசியசேமிப்புவங்கிமுகாமையாளர் எஸ்.வீ.சுவேந்திரன் ,நூலின் முதல் பிரதிபெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,மற்றும் சமூகஆர்வலர்களைகலந்துகொள்ளுமாறுநிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர். துறையூர் தாஸன் |
பிறசெய்திகள் >