13.12.16- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைக்கு அவசியமான பொருட்கள் அடங்கிய 350 பொதிகளை முஸ்லிம் எய்ட் வழங்கியது..

posted Dec 12, 2016, 5:32 PM by Habithas Nadaraja
கொடிகாவத்த ரோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்கள் மற்றும் கொட்டிகாவத்த பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆனால் வௌ;வேறு பாடசாலைகளில் கல்வி பயலும் மாணவர்கள் 9ம் திகதி அன்று சப்பாத்து, புத்தகப் பை மற்றும் கற்கை உபகரணங்கள் அடங்கிய 350 பொதிகளை முஸ்லிம் எய்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொண்டனர். 

இந் நிகழ்வு கொட்டிகாவத்த ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் பௌத்த, கிறித்தவ, இஸ்லாமிய சமயத் தலைவர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் முஸ்லிம் எய்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

இதேபோன்று, கடந்த மாதம் பாடசாலைக்குச் செல்ல அவசியமான பொருட்கள் அடங்கிய 500 பொதிகளை தெமடகொட விபுலாந்தா கல்லூரி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இதர பாடசாலை மாணவர்கள் பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

களனி கங்கைப் பெருக்கெடுப்பினால் ஏற்பட்ட பாரிய வெள்ள 
அனர்த்தம் காரணமாக கடந்த ஜுலை மாதம் பாதிக்கப்பட்ட பல்வேறு சமூகப் பிரிவினருக்கு முஸ்லிம் எய்ட்  வாழ்வாதாரம், தொழில்களுக்கு மீளத் திரும்புவதற்கான உபகரணத் தொகுதிகளை பல்வேறு நன்கொடை அமைப்புகளின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. 

வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் பாரபட்சமின்றி முஸ்லிம் எய்ட் ஊடாக அனர்த்த நிவாரண சேவைகளைப் பெற்று வருகின்றனர். 

(அஸீம் கிலாப்தீன்)





Comments