கிழக்கில் 258நிலையங்களில் 14ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றும்பணிஆரம்பம் கல்முனைக்கு 4870தடுப்பூசிகள் முதல்நாள் 998ஏற்றப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் சுகாதார துறைசார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் மொத்தமாக 14010 கொரணா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு 258 நிலையங்கள் ஊடாக ஏற்றும் பணி ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதில் கல்முனைப்பிராந்தியத்திற்கு 4870 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் அவற்றில் முதல்நாள் 998தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதாகவும் கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் தெரிவித்தார். கல்முனை பிராந்தியத்தில் நேற்று 30ஆம் திகதி ஆரம்பமான கொரோனா தடுப்பூசி வழங்கலின் கணக்கு விவரங்களின் படி நாவிதன்வெளி 29கல்முனை தெற்கு 144 சாய்ந்தமருது 50 காரைதீவு 50நிந்தவூர் 29அட்டாளைச்சேனை 170அக்கரைப்பற்று 40 ஆலையடிவேம்பு 72திருக்கோவில் 40பொத்துவில் 80 இறக்காமம் 30சம்மாந்துறை 20கல்முனை வடக்கு 264 என்ற வீதத்தில் முதல்நாளில் ஏற்றப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பு மாட்டத்திற்கு 3400 தடுப்பூசிகளும் அம்பாரைக்கு 3070 தடுப்பூசிகளும் கல்முனைக்கு 4870 தடுப்பூசிகளும் திருகோணமலைக்கு 2670 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டிருந்தன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு வழங்கப்பட்ட 3400 கொரணா தடுப்பூசிகள் அனைத்தும் 14 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள்இ மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட 37 வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உழியர்கள் உள்ளடங்கலாக பகிர்ந்தளிக்கப்பட்டு அவற்றினை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரன் தெரிவித்தார். ( விரி. சகாதேவராஜா) |
பிறசெய்திகள் >