01.12.18- கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி..

posted Dec 1, 2018, 1:59 AM by Habithas Nadaraja

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 03.12.2018 ஆரம்பமாகி எதிர்வரும்12 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

இரத்மலானை விசேட தேவையுடையோர் வித்தியாலயம் மற்றும் தங்கல்ல மாத்தறை சிலாபம் கொழும்பு மகசீன் சிறைச்சாலை போன்றவற்றில் விசேட பரீட்சைநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போராதனை போதனா வைத்தியசாலை மஹரகமபுற்றுநோய் வைத்தியசாலை போன்றவற்றிலும் பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சை நடவடிக்கைகளுக்காக 47 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாலாயிரத்து 561 பரீட்சை நிலையங்களும்இ 541 பரீட்சை இணைப்பு நிலையங்களும் நாடு தழுவிய ரீதியில்அமைக்கப்பட்டுள்ளன.


Comments