02.01.20- பாடசாலைகள் ஆரம்பம்:பாடசாலைகள் அனைத்திற்கும் டெங்கு புகைவிசிறல் பூர்த்தி..

posted Jan 2, 2020, 9:21 AM by Habithas Nadaraja
பாடசாலைகள் ஆரம்பம் பாடசாலைகள் அனைத்திற்கும் டெங்கு புகைவிசிறல் பூர்த்தி
பணிப்பாளர் சுகுணனின் பணிக்கு கல்விச்சமுகம் வாழ்த்து..

அரசாங்க பாடசாலைகள் (02.01.2020)  புத்தாண்டிற்கான முதலாந்தவணை  கல்விச்செயற்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டன.

அதற்கு முன்னோடியாக  கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் கு.சுகுணனின் விசேட ஏற்பாட்டில் பிராந்தியத்துக்குட்பட்ட கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில் வலயப்பாடசாலைகள் அனைத்திற்கும் டெங்கு நுளம்மை அழிக்கும் புகைவிசிறப்பட்டன.

அந்தந்த பிரதேச பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் இப்புகைவிசிறும் பணியை மேற்கொண்டிருந்தன.
இதனால் பெற்றோர்கள் அச்சமின்றி திருப்தியுடன் தமது பிள்ளைகளை நேற்று பாடசாலைக்கு அனுப்பிவைத்தார்கள்.

கல்முனை பிராந்திய பாடசாலைகள் அனைத்தும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விதத்தில் புகைவிசிறப்பட்டு  மாணவர்களை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை எடுத்த கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணனிற்கு கல்விச்சமுகம் தமது பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

(காரைதீவு  நிருபர்)
Comments