02.11.19- ஜனாதிபதி வேட்பாளர் சஜித் 9ஆம் திகதி அம்பாறை வருகிறார்..

posted Nov 1, 2019, 6:33 PM by Habithas Nadaraja
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் 9ஆம் திகதி அம்பாறை வருகிறார்
முன்னாள் எம்.பி.சங்கரின் வேண்டுகோளையேற்று திருக்கோவில் விஜயம்..


ஜக்கியதேசியக்கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 9ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவிருக்கிறார்.

தேர்தல் பிரசாரத்தின்பொருட்டு அவர் அன்று அட்டாளைச்சேனை கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று பொத்துவில் ஆகிய இடங்களுக்கு விஜயம்செய்கிறார்.

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் விடுத்த வேண்டுகோளையேற்று அன்று தமிழ்ப்பகுதிகளுக்கும்  விஜயம் செய்யவுள்ளார்.

முன்னதாக வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திற்கு விஜயம்செய்து விசேடபூஜை வழிபாட்டில் கலந்துகொண்டு பிரசாரக்கூட்டமொன்றில் கலந்துகொள்வார்.நேரத்தைப்பொறுத்து காரைதீவிலும்ஒரு கூட்டம் நடாத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

அவருடன் இந்துகலாசார புனர்வாழ்வு அமைச்சர் மனோகணேசனும் மேலும் பல அமைச்சர்களும் வருகைதரவிருக்கின்றனர். அமைச்சர் சஜித்தின் கிழக்குமாகாண இணைப்பாளரான முன்னாள் கிழக்குமாகாண ஆளுநர் ரோஹிதபோகல்லாகமவும் சமுகமளிப்பார்.

 (காரைதீவு  நிருபர்)


Comments