03.12.18-பொலிஸ் மரியாதையுடன் பெருந்திரளானோர் சங்கமிக்க பலியான பொலிஸ்வீரர் தினேசின் பூதவுடல் நல்லடக்கம்..

posted Dec 2, 2018, 5:28 PM by Habithas Nadaraja
மட். வவுணதீவில் இனந்தெரியாதவர்களினால்  சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் தினேஸ் அவர்களின் பூதவுடல்  அவரது சொந்த ஊரான பெரியநீலாவணையில் பூரண பொலிஸ் மரியாதையுடன்  நேற்று (02.12.2018) நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினேசின் பூதவுடலுக்கு பூரண பொலிஸ் மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டு அவர்களால் பூதவுடல் தாங்கிய பேழை சுமந்துவரப்பட்டு பெருந்திரளானோர் மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பொலிசாருடன் விசேட அதிரடிப்படையினரும் அணிவகுப்பு மரியாதையில் ஈடுபட்டிருந்தனர்.பலியான தினேசுக்கு பதவியுயர்வுச்செய்தியும் அங்கு வாசிக்கப்பட்டது.

பொலிஸ் உத்தியோகத்தர் தினேசின் உயிரிழப்பால் பெரியநீலாவணை மட்டுமிண்றி கல்முனை பிரதேசமே சோகமயமாக உள்ளதுடன் இறுதியஞ்சலி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்தகொண்டு அஞ்சலி செலுத்தினர்.வவுணதீவில் கடமையில் இருந்தபோது இனந்தெரியாகவர்களினால் தினேஸ் மற்றும் பிரசன்ன ஆகிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

காரைதீவு  நிருபர் 

Comments