03.12.19- சாதாரண தரப் பரீட்சை - விடைத்தாள் திருத்தும் பணிகள் 2 கட்டங்களாக..

posted Dec 3, 2019, 9:40 AM by Habithas Nadaraja
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதலாவது கட்டத் திருத்தப் பணிகள் டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட பணிகள் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

திருத்தப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ள பாடசாலைகளில் 47 பாடசாலைகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி புதிய வருடத்திற்கான முதலாம் தவணை கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. ஏனைய பாடசாலைகளின் முதலாம் தவணை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments