04.01.19- கைதிகளுக்கு பொது மன்னிப்பு..

posted Feb 3, 2019, 7:20 PM by Habithas Nadaraja

தேசிய தினத்தை முன்னிட்டு 545 சிறைக்கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அரசியல் அமைப்பின்படி தமக்குள்ள அதிகாரத்தின் மூலம், இந்த சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்கியுள்ளார் என்று சிறைச்சாலை திணைக்களத்தின் பேச்சாளர் துஷரா உப்புல்தெனிய தெரிவித்தார்.சிறு குற்றங்களை புரிந்தவர்களே இவ்வாறு மன்னிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் வேறு குற்றங்கள் காரணமாக இவர்களில் 27 பேர் மீளவும் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்றும் பேச்சாளர் துஷரா உப்புல்தெனிய கூறினார்.


Comments