04.01.19- தேசியக்கொடி சகிதம் பாங்கொக்கில் இலங்கையர் அறிவியல் கண்காட்சியில்..

posted Feb 3, 2019, 7:06 PM by Habithas Nadaraja   [ updated Feb 3, 2019, 7:36 PM ]
தேசியக்கொடி சகிதம் பாங்கொக்கில் இலங்கையர் அறிவியல்கண்காட்சியில்..
இளம்விஞ்ஞானி வினோஜ்குமாரின் 3 கண்டுபிடிப்புகளை பார்வையிடுவோர் அதிகம்..

இன்று இலங்கையில் 71வது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கையில் இலங்கையின் தேசியக்கொடியுடன் தாய்லாந்து பாங்கொக்கில் இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் நால்வர் கண்காட்சியில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

(02.01.2019) பாங்கொக் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான இந்த அறிவியல்புலமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழினுட்பக்கண்காட்சி நாளை மறுதினம்(06.01.2019) வரை தொடரும்.

இலங்கையிலிருந்து 3கண்டுபிடிப்புகளுடன் சென்ற இளம்விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் 1கண்டுபிடிப்புடன் சென்ற எம்.சி.எம்.அனீஸ் புத்திகபிரசன்ன டிசில்வா மெத் டர்சுன் சந்தமல் ஆகிய புத்தாக்குனர்கள் அந்தக்கண்காட்சியில் தேசியக்கொடி சகிதம் கலந்துகொண்டுள்ளனர். அவர்களது ஆக்கங்களைக்காட்சிப்படுத்த விசேட ஏற்பாடு அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் 3 கண்டுபிடிப்புகளை பார்வையிடுவோர் தொகை அதிகமாகுமென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச மட்டத்திலான இப்போட்டியில் வினோஜ்குமாரின் புத்தாக்கங்கள் பதக்கங்களை வெல்லும் சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களது பயணத்திற்கான முழப்பொறுப்பையும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு ஏற்றிருந்தமையும் அவர்களுக்கு மேலதிகமாக பாக்கட் செலவாக 500 அமெரிக்கடொலர் வழங்கப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு  சகா)

Comments