04.02.19- உளவியல் ஆலோசனை மய்யத்தின் மாணவர்களுக்கான 'தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு..

posted Feb 3, 2019, 6:31 PM by Habithas Nadaraja   [ updated Feb 3, 2019, 6:35 PM ]
அண்மைக்காலங்களாக இலங்கையில் தற்கொலை உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதனை கருத்தில் கொண்டு அதனை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தினை ''உளவியல் ஆலோசனை மய்யம்" ஆரம்பித்துள்ளனர்.

தற்கொலை முயற்சி மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து மக்களை மீட்கும் செயற்திட்டங்களை கிராமம் தோறும் நடைமுறைப்படுத்தி வாழ்தலின் நோக்கத்தை தெளிவுபடுத்துவதோடு தற்கொலையை முற்றாக தடுக்கும் வகையில் விழிப்புணர்வுகளை எற்படுத்திவரும் உளவியல் ஆலோசனை மய்யப் பிரதிநிதிகள்  (2019.02.01)மட்டக்களப்பு கரடியனாறு மகாவித்தியாலயத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கை நடாத்தியிருந்தார்கள். குறித்த நிகழ்வு பாடசாலை வளாகத்தில் அதிபர் திரு.செந்தில்நாதன் தலைமையில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் உளவியல் ஆலோசனை மய்யத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ரூபன், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி . கிழக்குமாகாண ஊடகப்பேச்சாளர் திரு.பிரகாஷ் மற்றும் பிராந்திய வலுவூட்டல் பிரிவின் செயலாளர் திரு.ரணீஷியன், அமைப்பின் உபதலைவர் உட்பட அமைப்பின் பிராந்திய களச்செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டம், மலையகம் மற்றும் வடமாகாணம் போன்ற பல இடங்களுக்கும் தமது விழிப்புணர்வு செயற்பாடுகளை விரிவுபடுத்தவுள்ளதாக உளவியல் ஆய்வுமய்யத்தின் சர்வதேச ஊடக இணைப்புச்செயலாளர் திரு.ஜெயந்தன்  தெரிவித்தார்.

காரைதீவு நிருபர் Comments