04.04.21- சுற்றாடல் பாதுகாப்பு பிரதேச செயலாளர் அலுவலங்களுக்கு அபிவிருத்தி அதிகாரிகள்..

posted Apr 3, 2021, 7:18 PM by Habithas Nadaraja
சுற்றாடலை பாதுகாப்பதற்காக பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்குஇ 350 பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகளை இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது..

இந்த அபிவிருத்தி அதிகாரிகள் நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் அலுவலங்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கான முதலாவது குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டோருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்;டன.

சுற்றாடல் அமைச்சில் இதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Comments