04.07.18- உகந்தையில் 2000அடியார்கள் இன்று காட்டுக்குள் பிரவேசிப்பர்..

posted Jul 3, 2018, 6:17 PM by Habithas Nadaraja
கதிர்காமஆடிவேல் விழா உற்சவத்தையொட்டி பாதயாத்திரையில் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை இன்று(04.07.2018)  காலை 6மணிக்குத் திறக்கப்படும்.

இம்முறை முதல்நாள் காட்டுப்பாதை திறக்கப்படும்போது பயணிப்பதற்காக உகந்தமலை முருகனாலயத்தில் தற்சமயம் வேல்சாமி குழுவினர் உள்ளிட்ட சுமார் 2000 அடியார்கள் தங்கியுள்ளனர். 

அம்பாறை மற்றும் மொனராகல அரசாங்க அதிபர்கள் கலந்துகொள்ளும் இச்சம்பிரதாயநிகழ்வு இன்று காலை 5.30மணிக்கு நடைபெறும்.
முன்னதாக உகந்தமலை முருகனாலயத்தில் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ.க.கு.சீதாராம் குருக்களின் விசேட பூஜை அதிகாலை 5மணியளவில் நடைபெறும். இதில் பயணிக்கும் யாத்திரீகர்கள் கலந்துகொள்வர்.பிரதமகுரு சீதாராம் குருக்களின் ஆசியுரையுடன் அரசாங்க அதிபர்களின் உரைகளுடன் காட்டுப்பாதை காலை 6மணியளவில் திறக்கப்படும்.

(காரைதீவு  நிருபர்)Comments