04.08.18- சிறுநீரகம் தொடர்பான விழிப்புணர்வும், போதைப் பொருள் பாவிக்கவோ அதற்கு உடந்தையாக இருக்கவோ மாட்டோம் என்ற உறுதிமொழியும்..

posted Aug 4, 2018, 3:47 AM by Habithas Nadaraja
அட்டாளைச்சேனை அறபா வித்தியால மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி மற்றும் சிறுநீரகம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம வளவாளராக சுகாதார அமைச்சின் ஆலோசகரும், உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்குரிய நிபுணத்துவ ஆலோசகரும், நிந்தவூர் அசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் கந்துகொண்டு “சீறுநீரக பாதிப்பிலிருந்து எம் மாணவ சமூகத்தை எவ்வாறு பாதுகாப்பது” என்ற விழிப்புணர்வு உரையினை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

அத்துடன் “சீறுநீரக பாதிப்பிலிருந்து எம் மாணவ சமூகத்தை எவ்வாறு பாதுகாப்பது” என்ற துண்டுப் பிரசும் மற்றும் அட்டைகளை அதிபர் மற்றும் மாணவர்களுக்கு வழங்கி வைத்தார். 

மேலும் “எம் வாழ்நாளில் போதைப் பொருள் பாவிக்கவோ அல்லது அதற்கு உடந்தையாக இருக்கவோ, விற்பனை செய்யவோ மாட்டோம் என்று உறுதிமொழியை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 
Comments