05.01.19- ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்டத் தலைவராக ஆலையடிவேம்பு ரகுபதி தெரிவு..

posted Feb 4, 2019, 8:04 PM by Habithas Nadaraja   [ updated Feb 4, 2019, 8:05 PM ]
ஸ்ரீலங்கா  சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்டத்தலைவராகஆலையடிவேம்பு ரகுபதி தெரிவு!
அம்பாறை தமிழர்களின் குரலாக ஒலிப்போம் என்கிறார் அவர்..


ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்டத்தலைவராக ஆலையடிவேம்புப்பிரதேச சு.கட்சி அமைப்பாளர் கணேசபிள்ளை ரகுபதி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

(02.02.2019) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தலைமையில் சுதந்திர தமிழர் ஒன்றியம் தெரிவு இடம்பெற்றபோதே அம்பாறை மாவட்டத்தலைவராக க.ரகுபதி ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஆலையடிவேம்பு அமைப்பாளர் க.ரகுபதி கடந்தகாலத்தில் ஆலையடிவேம்பு பிரதேசசபையின் உதவிதவிசாளராக இருந்து சேவையாற்றியவர்.

மாவட்டத்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டபின் அவர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்:

எமது கட்சியில் முதற்றடவையாக இவ்வாறு தமிழ்ப்பிரதிநிதிகள் மத்தியில் சுதந்திர தமிழர் ஒன்றியம் ஆரம்பித்தவைக்கப்பட்டமை உண்மையில் மகிழ்ச்சியைத்தருகிறது.

நாம் அமைப்பாளர்கள் உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் மக்கள் பிரதிநிதிகள் என சுமார் 700பேரளவில் கலந்தகொண்டோம். தலைவராக யாழ் .அங்கஜன் இராமநாதன் தெரிவானார்.

தமிழ்மக்கள் வாழ்கின்ற 14மாவட்டங்களுக்கும் 14 மாவட்டத்தலைவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அதில் அம்பாறை மாவட்டத்திற்கு நான் தலைவராகத் தெரிவானேன். மேலும் 5பேர் உறுப்பினர்களாகத் தெரிவானார்கள்.

நாம் 14அம்சக்கோரிக்கையனடிப்படையில் யாப்பின்பிரகாரம் செயற்படவுள்ளோம். ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தோட்டத்தொழிலாளர்களின்நாளாந்த வேதனமாக 1000ருபா தமிழ்அரசியல்கைதிகளின் விடுதலை என 15அம்சங்களை அடிப்படையாகவைத்துசெயற்படுவோம்.

இதைவிட அம்பாறை மாவட்டத்தில் மாவட்டத்தில் நலிவடைந்துள்ள தமிழ்மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் கட்டியெழுப்ப பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். 
வேலைவாய்ப்புகள் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளை தமிழ்மக்களுக்கு பாராபட்சம் அநீதி நடக்கின்றபோது அதற்கெதிராக குரல்எழுப்பி நீதியைப்பெற்றுக்கொடுப்போம்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்மக்கள் எதிர்நோக்கிவருகின்ற நீண்டகாலபிரச்சினைகள் சமகாலப்பிரச்சினைகளை எதிர்கொண்டு தீர்வைப்பெற்றுக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். என்றார்.

(காரைதீவு நிருபர்)


Comments