05.08.18- தரம்5 புலமைப்பரிசில் அடைவுமட்டத்தை அதிகரிக்க விசேட கற்றல் வலுவூட்டல் செயற்றிட்டம்..

posted Aug 4, 2018, 7:10 PM by Habithas Nadaraja
தரம்5 புலமைப்பரிசில் அடைவுமட்டத்தை அதிகரிக்க  விசேட கற்றல் வலுவூட்டல்  செயற்றிட்டம்!
49லட்சருபாவை பயன்படுத்தமுடியுமென கல்விப்பணிப்பாளர் நஜீம் அறிவுறுத்தல்..

எதிர்வரும் 05.08.2018 இல் நடைபெறவுள்ள தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சம்மாந்துறை வலய மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்க சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை விசேட கற்றல் வலுவூட்டல்  செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்திவருகின்றது.

இதற்கென லயக்கல்விக்காரியலயத்தால் விசேட கைநூலொன்றும் வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது. கடந்தகாலங்களைவிட இம்முறை மிகவும் கூடுதலான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

  உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர்கள் தத்தமது பாடசாலை மேம்பாட்டுநிகழ்ச்சித்திட்டப் பாடசாலைகளில் மேற்கொள்ளவேண்டிய நடைமுறை மற்றும் விசேட செயற்றிட்டம் தொடர்பாக அல்முனீர் வித்தியாலயத்தில் வைத்து விளக்கமளித்தார்.அதிபர்கள் கூட்டமும் நடாத்தப்பட்டது. இதற்கென வலயத்திற்கு மாகாணத்தால்  மாணவர் மைய கற்றல்மேம்பாட்டு நன்கொடைத்திட்டத்தின்கீழ்கிடைக்கப்பெற்ற 49லட்சருபாவை அதிபர்கள் பயன்படுத்தமுடியும் என பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

வலய கல்விசார் அணியினர்  அவரவர் பாடசாலைக்குச்சென்று தரம்5புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களை நெறிப்படுத்திவருவதோடு  அடைவுமட்டத்தை அதிகரிக்க விசேட நுட்பங்களை பயன்படுத்த ஆசிரியர்களை ஊக்குவித்துவருகின்றனர். பல உதவிகருத்தரங்கொன்று நடைபெற்றுள்ளன. சனிக்கிழமையும் செயலட்டை பரீட்சையொன்று நடைபெறவுள்ளது.கடந்த புதனன்று யாழ்ப்பாணத்திலிருந்துவரவழைக்கப்பட்ட விசேட வளவாளர் ஒருவரினால் முழுநாள் வலுவூட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.

எதிர்வரும் 5.8.2018 இல் நடைபெறவுள்ள தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை 70 புள்ளிகளுக்கு மேல் பெறுவதற்கான செயற்றிட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவேண்டுமென வலியுறுத்தப்பட்டதுடன் பாடசாலை  இணைப்பாளர்கள் தங்களுக்குப் பொறுப்பான பாடசாலைகளுக்கு வந்து மேற்பார்வை செய்துவருகின்றனர். விஷேடமாக  இலக்கை அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் வெட்டுப்புள்ளிக்கு மேல் சென்ற வருடம் பெற்ற தொகையைவிட இம்முறை கூடுதலான மாணவர்கள் சித்தியடைய செயற்பட வேண்டுமெனவும் அதிபர்கள் கூட்டத்தில் சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் சஹூதுல் நஜீம் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

வலயத்தில் 82ஆகவிருந்த சித்திபெற்ற மாணவர்தொகையை 108வரை கொண்டுவந்திருக்கின்றோம். இம்முறை அது 150ஆக உயர்வடையவைப்பதே எம்அனைவரதும் நோக்கமாக இருக்கவேண்டும் என்றார்.

காரைதீவு நிருபர்

 
Comments