05.11.19- ஜனாதிபதி தேர்தலையொட்டி சம்மாந்துறை வலயத்தில் முன்கூட்டியே 3ஆம் தவணைப்பரீட்சைகள்..

posted Nov 4, 2019, 5:40 PM by Habithas Nadaraja
எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு சம்மாந்துறை வலயத்தில் மூன்றாந்தவணைப்பரீட்சைகள் முன்கூட்டியே நடாத்த திட்டமிட்டுள்ளதாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் தெரிவித்தார்.

அதன்படி   க.பொ.த சாதரணதர மாணவர்களுக்கான மூன்றாந்தவணைப்பரீட்சைகள் (04.11.2019)  ஆரம்பமாகின்றது. அதேவேளை  தரம் 6முதல் 10 வரையுள்ள மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகின்றன.

இதுஇவ்வாறிருக்க ஆரம்பவகுப்பு மாணவர்களுக்கான 3ஆம் தவணைப்பரீட்சைகள் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் என்பதை கல்விஅபிவிருத்திக்குப்பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எ.எம்.நெசாட் உறுதிப்படுத்தினார்.

 இதனிடையே க.பொ.த உயர்தரவகுப்பு மாணவர்க்கான பரீட்சைகள் தற்சமயம் நடைபெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தகக்கது.

அதற்கான சகலஅறிவுறுத்தல்களும் அதிபர்கூட்டத்திலும்  கல்விசார் அதிகாரிகளின்கூட்டத்திலும் விடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கும் சுற்றுநிருபமூடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதுஎப்படியிருப்பினும் 3ஆம் தவணை விடுமுறைக்கு முன்பதாக சகல மாணவருக்குமான மாணவர் முன்னேற்ற அறிக்கைகள் கையளிக்கப்படவேண்டுமென்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

கிழக்கு மாகாணகல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரின் பணிப்புரையின்பேரில் இம்முறை 3ஆம் தவணைப்பரீட்சை பாடசாலை மட்டத்திலேயே நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட பாடசாலைகளே வினாப்பத்திரத்தைத்தயாரித்து பரீட்சைகளை நடாத்தவேண்டுமென பணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பாடசாலைகளின் பாடஆசிரியர்கள் அதற்கான வினாப்பத்திரங்களைத்தயாரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு நிருபர்)


Comments