06.02.19- சுத்தமான குடிநீர் பவுசர்மூலம் வழங்கிவைப்பு..

posted Feb 5, 2019, 5:55 PM by Habithas Nadaraja
நஞ்சான நீரால் பாதிக்கப்பட்ட மல்லிகைத்தீவு மக்களுக்கு உபதவிசாளர்
ஜெயச்சந்திரனின் ஏற்பாட்டில் சுத்தமானகுடிநீர்பவுசர்மூலம் வழங்கிவைப்பு..


குடிநீர் நஞ்சாகியதால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தையடுத்துள்ள மல்லிகைத்தீவுக் கிராம மக்களுக்கு
சம்மாந்துறைப்பிரதேசசபையின் உபதவிசாளர் வெ.ஜெயச்சந்திரன் எடுத்துக்கொண்ட துரித முயற்சியின் பலனாக நேற்று அங்கு சுத்தமான குடிநீர் பவுசர் மூலம் வழங்கப்பட்டது. இதற்கு கல்முனை இளைஞர்சேனையினால் வழங்கப்பட்ட 9 நீர்க்கொள்கலன்கள் உதவியாகவிருந்தன.

அண்மையில் அக்கிராமத்திலுள்ள 42 கிணறுகளிலுள் நீர் கல்சியம் மற்றும் வயலுக்கு அடிக்கும் இரசாயனப்பொருட்களாலும் நஞ்சாகியுள்ளதால் அங்கு மக்களுக்கு சிறுநீரகநோய் ஏற்பட்டுள்ளது.

அருந்துவதற்கு உகந்ததற்ற குடிநீரினால் மல்லிகைத்தீவு மக்கள் சிறு நீர் நோய்க்கு உள்ளாகியுள்ளதுடன் கடந்த வருடம் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 10க்கு மேற்பட்டவர்கள் நோய் பாதிப்புக்கும் உள்ளாகி உள்ளனர்.

குடிநீர் பிரச்சனையால் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள மல்லிகைத்தீவு கிராம மக்களை இந்த அவலத்தில் இருந்து மீட்கும் அவரச நடவடிக்கையாக கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையினால் தற்காலிக ஏற்பாடாக குடிநீர் வழங்குவதற்கான நீர் கொள்கலன்கள் ஒன்பதினை மல்லிகைத்தீவு மக்களுக்கு வழங்கியதுடன்  குடிநீர் பெறக் மூடிய வகையில் தாங்கிளை நிறுவி உள்ளனர்.
இளைஞர் சேனை கடந்தவாரம்  நேரடியாக கள ஆய்வினையும் மேற்கொண்டனர். தற்போது ஒன்பது நீர் தாங்கிளை அமைத்து கொடுத்துள்ளனர். இந்த நீர்தத் தாங்கிகள் இளைஞர் சேனையினால் அமைக்கப்படும் வரை இந்த மககளுக்கான அவசர நிரந்தர
தீர்வினை காண்பதற்கு அரசியல்வாதிகள் யாரும் சென்றிருக்கிவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இனி செல்லும் செல்லவுள்ள அரசியல் பிரதிநிதிகள் இந்த மக்ககளக்கான நிரந்தரமாக பெறுவதற்கு உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்பதே இம்மக்கள் வைக்கும் முக்கிய கோரிக்கையாகும்.

மல்லிகைத்தீவு மக்களுக்கான வைத்திய பரிசோதனை வைத்திய முகாம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. வைத்திய முகாம் தொடர்பாகவும் வைத்தியசாலை நிருவாகத்துடன் இளைஞர் சேனை கலந்துரையாடி இருந்தனர்.

(காரைதீவு   நிருபர் சகா)

Comments