06.08.18- அம்பாறையில் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பம்..

posted Aug 5, 2018, 6:15 PM by Habithas Nadaraja
 2018 சிறுபோக நெல் அறுவடைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தில் உகண, கோம்பான கிராமத்தில் இன்று ஆரம்பமானது.ஒருஇலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வது இலக்காகும் என்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் உபாலி மொஹட்டி தெரிவித்துள்ளார். 
 
அரசாங்கம் இதற்கென 490 கோடி ரூபாவை ஒதுக்கியிருப்பதாகவும் அவர் கூறினார். ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 42 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுகின்றன.


Comments