06.10.19- கல்முனையில் களைகட்டிய விடியலின்பாதையில் பாராட்டுவிழா..

posted Oct 5, 2019, 8:13 PM by Habithas Nadaraja   [ updated Oct 5, 2019, 8:14 PM ]
விடியலின்பாதை அமைப்பின் பாராட்டுவிழா நிகழ்வு  கல்முனை பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி தலைமயில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கௌரவஅதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரன் பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலய அதிபர் சி.புனிதன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்..

பாராட்டுப்பெறுவோர்களான  ஜனாதிபதிஊடகவிருதுபெற்ற கலைச்சுடர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா ஆலையடிவேம்பு விபுலாநந்த மாணவர்இல்லப் பொறுப்பாளர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை கல்முனைநெற் ஊடகவலையமைப்பின் ஸ்தாபகர் ஊடகவியலாளர் பு.கேதீஸ் இளம்கண்டுபிடிப்பாளர் சாதனையாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் தேசிய கராத்தே சாதனையாளர் சௌ.பாலுராஜ் ஆகிய ஜவரே பாராட்டப்பட்டனர்.

பாராட்டப்பட்டவர்கள் அனைவரையும் தனித்தனியே கருத்துரை வழங்கி பாராட்டி  ஒவ்வொருவரையும்  வழங்கப்பட்டன.
கல்முனை ஆதாரைவைத்தியசாலை நிருவாகமும் குறித்த 5 சாதனையாளர்களையும் பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கினர்.

இடையிடையே காரைதீவு ஆலையடிவேம்பு மாணவிகளின் கண்கவர் நடனநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதிதிகளுக்கும் பொன்னடைபோர்த்தப்பட்டு கௌiவிக்கப்பட்டனர்.
 
(காரைதீவு  நிருபர்) Comments