06.11.18- எதிர்க்கட்சி தலைவரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி..

posted Nov 5, 2018, 6:06 PM by Habithas Nadaraja
இலங்கை வாழ்அனைத்து மக்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாஷைகள் என்பனபாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்தசூழ்நிலையில்,இந்ததீபத்திருநாளானது தீயசக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும்நிலை நாட்டப்படுகின்ற ஒருநாளாக அமைவதோடு, எமதுமக்கள் நிரந்தரமான சமாதானத்தையும் உண்மையான சுதந்திரத்தினையும்அடையஇந்நன்னாளில்பிரார்த்தனைசெய்கிறேன். எமதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் இடர்கள்நீங்கிவளம் பெறஎல்லாம் வல்ல இறைவன்அருள்புரிவாராக. 

எமது மக்களும் இந்தநாடும் ஒருசுபீட்ஷமான எதிர்காலத்தை நோக்கிமுன்னேற இந்தநன்னாளில் இறைஞ்சுவோமாக.

இரா. சம்பந்தன் 
எதிர்க்கட்சி தலைவர் - இலங்கை பாராளுமன்றம்
தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு


Comments