06.11.18- மரம் நடுவோம் பசுமையை காப்போம் என்ற தொனிப்பொருளில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன..

posted Nov 5, 2018, 5:46 PM by Habithas Nadaraja

அகில இலங்கை விஐய் நற்பணி மன்றத்தினால் ‘மரம் நடுவோம் பசுமையை காப்போம்’ என்ற தொனிப்பொருளில் 650 தென்னங்கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.இந்த நிகழ்வு  (04.11.2018)  தெல்லிப்பளை வாலிபர் ஐக்கிய சங்க சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்வில் யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவல் ஆனொல்ட் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

சர்க்கார் திரைப்படத்தை வரவேற்கும் முகமாக அகில இலங்கை விஜய் நற்பணி மன்றத்தினால் தெல்லிப்பளை வாலிபர் ஐக்கிய சங்க சனசமூக நிலையத்தின் ஊடக அப்பிரதேச மக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.Comments